மோசமான குற்றவாளி யார்? அதிர்ச்சியளிக்கும் எக்ஸ் தளத்தின் பதில்!
J&K Cloudburst: ஜம்மு & காஷ்மீரில் ஏற்பட்ட மேக வெடிப்பு; 40-க்கும் மேற்பட்டோர் இறந்ததாக அச்சம்!
ஜம்மு & காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
இமாச்சலப் பிரதேசத்தில் தொடர்ந்து பல நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அதனுடன் நிலச்சரிவு, வெள்ளம் மற்றும் மேக வெடிப்புகளும் ஏற்பட்டு மக்கள் கடும் பாதிப்புள்ளாகி இருக்கின்றனர்.

அதேபோல கடந்த வாரம் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள உத்தரகாசியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு அந்த சம்பவத்தில் பலர் உயிரிழந்திருந்தனர்.
ஜம்மு & காஷ்மீரின் ஜோசிதி கிஷ்த்வாரில் மேக வெடிப்பு காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது.
இதன் இடிபாடுகளில் பலர் சிக்கியுள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. 10 பேர் உயிரிழந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்து சேதமடைந்துள்ளன.

மாநில பேரிடர் மேலாண்மை படை, தேசிய பேரிடர் மேலாண்மை படை, காவல்துறை ஆகியோர் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.