செய்திகள் :

இல்லாத ஊருக்கு சிறப்பு பேருந்து, பாேலீஸ் பாதுகாப்பு, வருவாய் அலுவலர் தந்த பாஸ் - சோக காட்சிகள்

post image

கடந்த ஆண்டு ஜூலை 30-ம் தேதி வயநாட்டின் சூரல்மலை பகுதியில் வரலாறு காணாத ஊருள்பொட்டல் - நிலச்சரிவு ஏற்பட்டது. அதில் புஞ்சிறிமட்டம், முண்டகை, சூரல்மலை என மூன்று கிராமங்கள் இயற்கையின் கோரத்திற்கு இறையாகின.

அந்த கிராமங்களில் வாழ்ந்த ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில், மீட்கப்பட்ட உடல்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கான கல்லறை புத்துமலை பகுதியில் அரசு அமைத்துள்ளது.

இந்த காேர சம்பவத்திற்கு பிறகு புஞ்சிறிமட்டம், முண்டகை, சூரல்மலை ஆகிய பகுதிகள் மக்கள் வாழத் தகுதியில்லாத இடம் என கேரள அரசு அறிவித்திருந்தநிலையில், இல்லாத ஊருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

புத்துமலை பகுதயில் அமைந்துள்ள கல்லறை தோட்டத்திற்கு உயிரிழந்தவர்களின் உறவினர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

வருவாய் அலுவலரிடம் பாஸ் பெற்று, பாேலீஸார் அனுமதித்த பிறகு தான் இந்த கிராமங்களை சென்று பார்வையிட மக்கள் அனுமதிக்கப்பட்டனர்.

நுாற்றுக்கணக்கான வீடுகளை சேதப்படுத்தி, ஆயிரக்கணக்கான உயிர் பலி வாங்கிய பாறைகள் சூரல்மலை ஆற்றில் கிடக்கின்றன.

பாறைகள் ஒவ்வொன்றின் எடையும், அளவும் வீடுகளின் முன் பார்க்கும் பாேது வீடுகளைவிட பெரிதாக தெரிகிறது.

இந்த துயர சம்பவத்தின் போது வீடுகளின் மீது அப்பிய சேர்கூட காய்ந்து ஓவியமாய் காட்சியளித்தாலும், இது மனிதர்கள் வாழ தகுதியில்லாத இடமாகவே இருக்கிறது.

Tsunami: 20 லட்சம் பேர் வெளியேற்றம்; போர் கால நடவடிக்கைகள் - திகில் இரவை எதிர்கொள்ளும் ஜப்பான்!

ரஷ்யாவின் கம்சாட்கா தீபகற்பத்துக்கு அருகில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அமெரிக்கா, ரஷ்யா, கனடா, ஜப்பான், சீனா, கொலம்பியா, ஈக்குவேடார் ஆகிய நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ரஷ்ய... மேலும் பார்க்க

Tsunami: ஜப்பான், ரஷ்யாவில் சுனாமி; உணவு பாதுகாப்பு குறித்து அதிகாரிகளின் விளக்கம் என்ன?

ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் இன்று 8.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு, பசிபிக் பெருங்கடல் முழுவதும் சுனாமி அலைகள் ஏற்பட்டுள்ளன. ரஷ்யாவின் கடற்கரைப் பகுதிகளில் உள்ள கட்டடங்களுக்க... மேலும் பார்க்க

Tsunami: அமெரிக்காவின் ஹவாய் தீவுகளைத் தாக்கிய சுனாமி; பல்லாயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்

ரஷ்யாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தின் எதிரொலியாக அங்கு சுனாமி தாக்கிய நிலையில், அமெரிக்காவின் ஹவாய் தீவுகளை சுனாமி தாக்கியிருக்கிறது.ரஷ்யாவின் கம்சாட்கா தீபகற்பத்திற்கு அருகே இன்று (ஜூலை 30,... மேலும் பார்க்க

Wayanad: காண்போரைக் கலங்க வைத்த வயநாடு நிலச்சரிவின் முதலாமாண்டு நினைவு அஞ்சலி! | Photo Album

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEkவணக்கம்,BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டே... மேலும் பார்க்க

Tsunami: சீனா, அமெரிக்கா, ஜப்பான், கனடா நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை -இந்தியா இடம் பெற்றிருக்கிறதா?

ரஷியாவின் கம்சாட்கா தீபகற்ப பகுதிக்கு அருகில் இன்று (புதன்கிழமை) காலை 8.25 மணிக்கு பூமிக்கு அடியில் 20 கிலோ மீட்டர் ஆழத்தில் ரிக்டர் அளவுகோலில் 8.7 ஆகப் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் ஜப்பானில் ச... மேலும் பார்க்க

Wayanad: ஓராண்டல்ல, நூறாண்டைக் கடந்தாலும் ஆறாது இந்த ரணம் | வயநாடு நிலச்சரிவு

வயநாடு நிலச்சரிவு எனும் கேரள மாநிலத்தில் வரலாறு கண்டிராத பேரழிவு ஏற்பட்டு இன்றுடன் ஓராண்டை எட்டியிருக்கிறது. கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் இறுதி வாரத்தில... மேலும் பார்க்க