செய்திகள் :

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... பொதுத் துறை வங்கிகளில் 10,277 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

post image

பொதுத்துறை வங்கிகளில் நாடு முழுவதும் காலியாக உள்ள 10,277 எழுத்தர்(கிளார்க்) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான எழுத்துத் தேர்வுக்கான அறிவிப்பை வங்கிகள் பணியாளர் தேர்வாணையம் (ஐபிபிஎஸ்) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் 21 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கடந்த ஆண்டு 6,18 காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியான நிலையில், நடப்பாண்டு காலியிடங்களுக்கான எண்ணிக்கை 10,277 ஆக அதிகரித்துள்ளது.

பணி: Customer Service Associates (Clerk)

காலியிடங்கள்: 10,277. தமிழ்நாட்டில் 894, புதுச்சேரிக்கு 19 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சம்பளம்: மாதம் ரூ.24,050 - 64,480

தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 21.8.2025 தேதியின்படி 20 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசுவிதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஐபிபிஎஸ் அமைப்பால் நடத்தப்படும் 100 மதிப்பெண்களுக்கான முதல்நிலை எழுத்துத் தேர்வு, 200 மதிப்பெண்களுக்கான முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

ஆன்லைன் எழுத்துத் தேர்வு முதல்நிலை மற்றும் முதன்மைத் தேர்வு என இரண்டு கட்டங்களாக நடைபெறும். இந்த தேர்வில் ஆங்கிலப்பாடத்தை தவிர மற்ற பாட வினாக்களுக்கு தமிழில் பதில் எழுத முடியும்.

முதல்நிலைத் தேர்வு நடைபெறும் மையம்: சென்னை, கோவை, தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, மதுரை, நாகர்கோவில், கன்னியாகுமரி, நாமக்கல், சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி,தூத்துக்குடி, திருப்பூர், வேலூர், விருதுநகர்.

முதன்மைத் தேர்வு நடைபெறும் மையம்: சென்னை, கோவை, மதுரை, நாமக்கல், சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர்.

ஆன்லைன் எழுத்துத் தேர்வுக்கான நுழைவுச்சீட்டை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளவும்.

முதல்நிலை் தேர்வு அக்டோர் மாதம் நடைபெறும். அதில் தகுதி பெறுபவர்கள் நவம்பர் மாதம் நடைபெறும் முதன்மைத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் ரூ.175, மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.850 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் www.ibps.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். எதிர்கால பயன்பாட்டிற்காக, ஆன்லைனில் விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக் கொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 21.8.2024

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக்செய்யவும்.

உளவுத்துறையில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!

Applications are invited from eligible and interested candidates aspiring to join as a Customer Service Associate in any of the Participating Public Sector Banks listed at (A) for the Common Recruitment Process (CRP CSA -XV) for vacancies of 2026-27.

சிறுதொழில் வளர்ச்சி வங்கியில் வேலை வேண்டுமா?

இந்திய சிறுதொழில்கள் வளர்ச்சி வங்கியில் காலியாக உள்ள 76 கிரேடு 'ஏ' மற்றும் 'பி' அதிகாரி பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 11 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன... மேலும் பார்க்க

அரசு கல்லூரிகளில் 574 விரிவுரையாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ள கௌரவ விரிவுரைவாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்ற... மேலும் பார்க்க

உளவுத்துறையில் 3,717 உதவி புலனாய்வு அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

மத்திய அரசின்கீழ் செயல்படும் உளவுத் துறைக்கு சொந்தமான அலுவலகங்களில் காலியாக உள்ள 3,717 உதவி புலனாய்வு அதிகாரி பணியிடங்களுக்கு பட்டதாரி இளைஞர்களிடம் இருந்தும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பணி: ASSI... மேலும் பார்க்க

உளவுத்துறையில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!

மத்திய அரசின்கீழ் செயல்படும் உளவுத் துறைக்கு சொந்தமான அலுவலகங்களில் காலியாக உள்ள 4,987 பாதுகாப்பு உதவியாளர், அலுவலர் பணியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற இருபாலர்களிடம் இருந்தும் விண்ணப்பங்க... மேலும் பார்க்க

கிராம உதவியாளர் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு!

தமிழகம் முழுவதும் உள்ள ஊராட்சி அலுவலகங்களில் 2,300 கிராம உதவியாளர் பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங் கள் வரவேற்கப்படுகின்றன. பணி : கிராம உதவியாளர் (Village Assistant)காலியிடங்கள் : 2,300சம்பள... மேலும் பார்க்க

சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத் துறையில் வேலை வேண்டுமா?

திருவள்ளூர் மாவட்டத்தில் தேசிய ஊரக நலவாழ்வு குழுமத்தின்கீழ் செயல்படும் மாவட்ட நல சங்கத்தில் காலியாகவுள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பணி மற்றும் ... மேலும் பார்க்க