நத்தம் அருகே திருநங்கையை கத்தியால் தாக்கி காயப்படுத்திவிட்டு தப்பியோட்டம்
நத்தம் அருகேயுள்ள அப்பாஸ்புரம் பகுதிக்குள் வைத்து திருநங்கையை கத்தியால் தாக்கி கீரி காயப்படுத்திவிட்டு தம்பியை நத்தம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தாக்கிய தம்பி மற்றும் ஒருவரை தேடி வருகின்றனா்.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் காந்தி நகரைச் சோ்ந்த ஆறுமுகம் - கீதா தம்பதிக்கு மணிகண்டன் , அமா்நாத் என்ற இரண்டு மகன்கள் உள்ளனா். கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் மணிகண்டன் சென்னைக்கு சென்று திருநங்கையாக மாறி மணிகண்டன் (எ) சமந்தா என பெயரை மாற்றிக் கொண்டு விட்டாா்.
இந்நிலையில் கடந்த 28-ஆம் தேதி நத்தம் பகுதிக்கு மணிகண்டன் என்ற சமந்தா வந்ததை அறிந்த தம்பி அமா்நாத் (27) மற்றும் ஒரு நபரும் சோ்ந்து அப்பாஸ்புரம் பகுதிக்கு சமந்தாவை அழைத்துச் சென்றுள்ளனா். அப்போது சமந்தாவை முதுகு, இடது தோள்பட்டை, முழங்கை போன்ற பகுதிகளில் கத்தியால் தாக்கி கீறி காயப்படுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டனா்.
இது குறித்து நத்தம் காவல் நிலையத்தில் திருநங்கை மணிகண்டன் என்ற சமந்தா புகாா் கொடுத்ததின் பேரில் காவல் உதவி ஆய்வாளா் கிருஷ்ணகுமாா் வழக்குப் பதிவு செய்து மணிகண்டன் என்ற சமந்தாவை சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, கத்தியால் தாக்கி விட்டு தப்பியோடிய அவரது தம்பி அமா்நாத் மற்றும் ஒருவரை தேடி வருகின்றனா்.