செய்திகள் :

பள்ளி ஆசிரியர்களுக்கு பாம்பு பிடிக்க பயிற்சி – கேரள வனத்துறை முடிவுக்கு காரணம் இதுதான்!

post image

கேரள மாநிலத்தில் மலைகள் ஆறுகள் வனப்பகுதி ஆகியவைகளை இயற்கையாகவே பராமரிப்பதில் முக்கியத்துவம் அளித்து வருகிறது அரசு. மக்களும் இயற்கை சார்ந்த சுற்றுச்சூழலை பாதுகக்கும் வகையில் செயல்பட்டுவருகின்றனர். அதேசமயம் வனப்பகுதியை ஒட்டியுள்ள குடியிருப்புகளில் வனவிலங்குகள் ஊருக்குள் வருவதால் பிரச்னைகள் வருகிறது. அதுமட்டுமல்லாது பாம்புகளும் குடியிருப்பு பகுதிகள் மற்றும் பள்ளிகளில் செல்வது என அவ்வப்போது வன உயிரினங்களால் தொல்லைகள் ஏற்படுவது வழக்கமாக உள்ளது. பாம்பு பிடிப்பதற்காக வனத்துறை சார்பில் சர்ப்பா என்ற பயிற்சி பெற்ற டீம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பள்ளி வளாகங்களிலோ, வகுப்பறைகளிலோ பாம்பு புகுந்தால் சர்ப்பா டீமை சேர்ந்த பாம்புபிடி வீரர்கள் வரும் வரை ஆசிரியர்களும், மாணவர்களும் பீதியுடன் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அப்படி காத்திருக்கும் சமயத்தில் பாம்புகள் கல்லிடுக்குகளிலோ, வேறு இடங்களிலோ புகுந்து மறைந்துவிடும் நிலை உள்ளது. இதை அடுத்து பள்ளி ஆசிரியர்களுக்கு பாம்பு பிடிக்கும் பயிற்சி அளிக்க கேரள மாநில வனத்துறை முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக பாலக்காடு மாவட்டத்தில் பாம்பு பிடிக்கும் பயிற்சியை தொடங்க உள்ளது வனத்துறை.

மாதிரி படம்
பாம்பு பிடித்தல்

ஆண்டு இறுதித்தேர்வுக்குப்பின் கோடை விடுமுறை முடிந்த பிறகு பள்ளிகள் திறப்பதற்கு முன்பாக வகுப்பறைகள் மற்றும் சுற்றுப்புற பாதுகாப்பு சம்பந்தமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது, பள்ளி வளாகங்களிலும், வகுப்பறைகளிலும் பாம்புகளின் தொல்லைகள் அதிகமாக இருப்பதாகவும், பாம்புகளை பாதுகாப்பாக பிடிப்பதற்கு பயிற்சி வேண்டும் என ஆசிரியர்கள் கேட்டதாகவும் வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீப நாட்களாக வகுப்பறைகளிலும் பள்ளி வளாகங்களிலும் பாம்புகள் தென்படுவதை தொடர்ந்து ஆசிரியர்கள் பாம்புபிடிக்கும் பயிற்சி அளிக்க வேண்டும் என கேட்டுள்ளனர்.

பாம்பு

இதைத்தொடர்ந்தே ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க வனத்துறை தயாரானது. விஞ்ஞான ரீதியாகவும் ஆபத்துக்கள் ஏற்படாத வண்ணமும் பாம்புகளை பாதுகாப்பாக பிடித்து அப்புறப்படுத்தும் பயிற்சி ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி ஒரு நாள் பயிற்சி முகாம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள பள்ளி ஆசிரியர்களுக்கு நடத்தப்பட உள்ளதாகவும். இந்த முகாம் நடதுவதற்காக பாலக்காடு சோசியல் பாரஸ்ட் அலுவலகத்திலிருந்து பள்ளிக் கல்வித் துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதன்மூலம் பள்ளி வளாகங்களிலோ, வகுப்பறைகளிலோ பாம்புகளை கண்டால் சர்ப்பா டீம் வரும்வரை காத்திருக்காமல் ஆசிரியர்களே உடனடியாக பிடிக்க முடியும். பாலக்காடு மாவட்டத்தில் இந்த திட்டம் வெற்றியடைந்தால் பிற மாவட்டங்களிலும் பயிற்சி விரிவுபடுத்தப்படும் என சர்ப்பா மிஷன் நோடல் ஆப்பீசர் முஹம்மது அன்வர் தெரிவித்துள்ளார்.

ஹவாய் தீவுகளில் ட்ரோன்கள் மூலம் விடப்படும் கொசுக்கள் - என்ன காரணம் தெரியுமா?

ஹவாய் தீவில் உள்ள கொசுக்களை அழிக்க ட்ரோன்கள் மூலம் கொசுக்கள் விடப்படுகின்றன. கொசுக்களை அழிக்க கொசுக்களையே விடுகிறார்களா என்று நீங்கள் ஆச்சரியத்தோடு கேட்கலாம். ஆனால் இது ஒரு பறவை இனங்களை பாதுகாக்க எடுக... மேலும் பார்க்க

கேரள பள்ளிகளில் கோடை விடுமுறைக்கு பதில் மழைக்கால விடுமுறை - புதிய விவாதம்; நீங்க என்ன நினைக்குறீங்க?

நாடு முழுவதும் பள்ளி கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை ஏப்ரல், மே மாதங்களில் விடப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. அதேசமயம் மழைக்காலங்களில் பலத்த மழை பெய்யும் மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை விடப்படுவதும... மேலும் பார்க்க

தினமும் உணவளிக்கும் மனித முகங்களை காக்கைகள் நினைவில் வைத்திருக்குமா? - அடடே தகவல்!

பொதுவாக காக்கைகள் நம் அன்றாட பார்க்கக்கூடிய ஒரு பறவை இனமாகும். இவை மற்ற பறவைகளைக் காட்டிலும் அதிக அறிவாற்றல் திறனுக்காக தனித்துவம் பெற்றவை என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். குறிப்பிட்ட நபர்கள் காகத்த... மேலும் பார்க்க

Tiger Day: முதுமலையில் 28 சதவிகிதமாக உயர்ந்த புலிகளின் எண்ணிக்கை - துளிர்க்கும் நம்பிக்கை!

காடுகளின் காவலன் என அழைக்கப்படும் புலிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 29- ம் தேதி, சர்வதேச புலிகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. புலிகளின் பாதுகாப்பு மற்றும் அவசியம் குறித்... மேலும் பார்க்க

World Tiger Day: புலியின் உறுமலே காட்டின் மொழி... புலியே மெய்யான வனக்காவலன்! - ஏன் தெரியுமா?

இன்று (ஜூலை 29-ம் தேதி) சர்வதேச புலிகள் தினம். புலிகளையும் அவற்றின் வாழிடங்களையும் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தவே இந்த நாள் கொண்டாடப்படுகிறது. உலக அளவில் இந்தியா, வங்கதேசம், ... மேலும் பார்க்க

தென்காசி: `நாங்க ட்ரக்கிங் போனோமே!' அரசுப்பள்ளி மாணவர்கள் உற்சாகம்

தென்காசி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் வனத்துறையின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வனத்தைப் பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் 8, 9,10ஆம் வகுப்பு அரச... மேலும் பார்க்க