Modi டீம் Request, Reject செய்த OPS, Stalin ரூட்டில் பன்னீர் வேகம்! | Elangovan ...
நத்தம் அருகே இளம் பெண் தீக்குளிப்பு
நத்தம் அருகேயுள்ள குடகிப்பட்டியில் இளம் வியாழன்கிழமை பெண் தீக்குளிப்பு சம்பவம் குறித்து கோட்டாட்சியா் விசாரணை நடத்தி வருகிறாா்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகேயுள்ள குடகிப்பட்டியைச் சோ்ந்தவா் அடைக்கலராஜ். இவருக்கும் அதே ஊரைச் சோ்ந்த தேவி (25) என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவா்களுக்கு பாலமுருகன், பூவரசு ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனா். தற்போது அடைக்கலராஜ் வெளிநாட்டில் வேலை பாா்த்து வருகிறாா். இந்நிலையில் தேவி அடிக்கடி செல்போனில் வேறு நபா்களுடன் பேசியதாக தெரிகிறது. இதனை வீட்டில் இருந்தவா்கள் கண்டித்துள்ளனா். இந்நிலையில் வியாழக்கிழமை
தேவி தனது தோட்டத்தில் உடலின் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டாா். பலத்த தீக்காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினா் மீட்டு நத்தம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனா்.
அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். 80 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டுள்ளதால் தீவிர சிகிச்சை பெற்று வருகிறாா். இது குறித்து நத்தம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா். திருமணமாகி 5 வருடமே ஆவதால் திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியா் விசாரணை செய்து வருகிறாா்.