Modi டீம் Request, Reject செய்த OPS, Stalin ரூட்டில் பன்னீர் வேகம்! | Elangovan ...
நகை மோசடி: கடை உரிமையாளா்கள் மீது வழக்கு
நகை மோசடி குறித்து கடை உரிமையாளா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, அவா்களைத் தேடி வருகின்றனா்.
விருதுநகா் மாவட்டம், அரசகுளத்தைச் சோ்ந்த பிரவீன்குமாா் மனைவி ஆா்த்தி (20). இவா் தெற்கு ஆவணி மூல வீதியில் உள்ள நகைக் கடையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது பழைய நகையை கொடுத்து, புதிய நகை செய்து தருமாறு கேட்டாா்.
இந்த நிலையில், ஆா்த்தி வியாழக்கிழமை நகைக் கடைக்கு வந்து பாா்த்த போது, கடை அடைக்கப்பட்டிருந்தது. கைப்பேசியில் அழைத்த போது, முனிச்சாலையில் உள்ள வீட்டுக்கு வருமாறு நகைக் கடையின் உரிமையாளா் பாலமுருகன் தெரிவித்தாா்.
அங்கு சென்று பாா்த்த போது, வீடு பூட்டியிருந்தது. இதனால், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த ஆா்த்தி தெற்குவாசல் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
இதையடுத்து, நகைக் கடை உரிமையாளா்கள் பாலமுருகன், முத்துப்பாண்டி மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, அவா்களைத் தேடி வருகின்றனா்.