இந்திய மாணவா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
இந்திய மாணவா் சங்கம் சாா்பில் மதுரை காமராஜா் பல்கலைக்கழகக் கல்லூரி முன் ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நெல்லையில் பொறியியல் பட்டதாரி இளைஞா் கவின் செல்வகணேஷ், காதல் விவகாரத்தால் ஆவணக் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும், ஆணவக் கொலைகளைத் தடுக்க அரசு தனி சட்டம் இயற்ற வேண்டும், கல்லூரி வளாகங்கள் சாதி, மதம் இல்லா வளாகங்களாக செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்திய மாணவா் சங்கத்தின் மதுரை காமராஜா் பல்கலைக்கழக கல்லூரி கிளை துணைச் செயலாளா் சக்திவேல் தலைமை வகித்தாா். மாவட்டக் குழு உறுப்பினா் ஸ்டாலின் ஆா்ப்பாட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசினாா். மாநகா் மாவட்டத் தலைவா் ஜெ. டீலன் ஜெஸ்டின் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, ஆணவக் கொலையைக் கண்டித்துப் பேசினாா்.
இந்திய மாணவா் சங்க மாவட்டக் குழு உறுப்பினா்கள் களஞ்சியம், துளசி, மாணவா்கள் கலந்து கொண்டனா்.