சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத் துறையில் வேலை வேண்டுமா?
திருவள்ளூர் மாவட்டத்தில் தேசிய ஊரக நலவாழ்வு குழுமத்தின்கீழ் செயல்படும் மாவட்ட நல சங்கத்தில் காலியாகவுள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் இதர விவரங்களை பார்ப்போம்:
பணி: Audiologist - 1
சம்பளம் : மாதம் ரூ.23,000
தகுதி: Audiology மற்றும் Speech Language Pathology பிரிவில் இளநிலை பட்டப் படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 40-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Radiographer - 3
சம்பளம்: மாதம் ரூ.13,300
தகுதி: Radiography-இல் இளநிலை பட்டப் படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 40-க்குள் இருக்க வேண்டும்.
பணி: OT Assistant - 1
சம்பளம்: மாதம் ரூ.11,200
தகுதி: OT Technician பிரிவில் 3 மாத பயிற்சிச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 40-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Special Education for Behaviour Theraphy - 1
சம்பளம்: மாதம் ரூ.23,000
தகுதி: Special Education in Intellectual Disability பிரிவில் முதுநிலைப்பட்டம் தேர்ச்சியுடன் RCI-இல் பதிவு செய்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 40- க்குள் இருக்க வேண்டும்.
பணி: Optometrist - 1
சம்பளம் : ரூ.14,000
தகுதி: Optometry-இல் இளநிலைப் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 40- க்குள் இருக்க வேண்டும்.
பணி: Physiotherapist - 1
சம்பளம்: மாதம் ரூ.13,000
தகுதி: Physiotheraphy-இல் இளநிலைப் பட்டப் படிப்பு தேர்ச்சியுடன் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது: 40- க்குள் இருக்க வேண்டும்.
பணி: Early Interventionist-cum-Special Educator-cum-Social Worker - 1
சம்பளம்: மாதம் ரூ.17,000
தகுதி: Physiotherapy (BPT), Occupational Theraphy பிரிவில் முதுநிலைப்பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 40-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Auxiliary Nurse Mid Wives, Urban Health Nurse (ANM)
காலியிடங்கள்: 13
சம்பளம் : மாதம் ரூ.14,000
கல்வித்தகுதி : ANM-இல் டிப்ளமோ தேர்ச்சியுடன் Nursing Council- பதிவு செய்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 40-க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://thiruvallur.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, அதை பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு விரைவுத் அஞ்சலில் அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
செயலாளர், மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட நல வாழ்வு சங்கம் (District Health Society), மாவட்ட சுகாதார அலுவலகம், 54/5 ஆசூரி தெரு, திருவள்ளூர் மாவட்டம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 31.07.2025