செய்திகள் :

பாகிஸ்தானிடம் இந்தியா எண்ணெய் வாங்கும் நிலை வரலாம்! டிரம்ப்

post image

பாகிஸ்தானிடம் இருந்து எண்ணெய் வாங்கும் நிலை இந்தியாவுக்கு ஏற்படலாம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

”இந்தியாவுடன் வா்த்தக ஒப்பந்தம் இப்போது வரை இறுதி செய்யப்படவில்லை. எனவே, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதிமுதல் 25 சதவீத வரி விதிக்கப்படும்” என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை அறிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து சில மணிநேரங்களிலேயே மற்றொரு அறிவிப்பையும் டிரம்ப் வெளியிட்டுள்ளார்.

“பாகிஸ்தானுடன் ஒப்பந்தம் நிறைவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பாகிஸ்தானும் அமெரிக்காவும் இணைந்து மிகப்பெரிய எண்ணெய் சேமிப்புக் கிடங்கை பாகிஸ்தானில் மேம்படுத்தப் போகிறோம்.

இந்த கூட்டாண்மையை வழிநடத்தும் எண்ணெய் நிறுவனத்தைத் தேர்ந்தெடுக்கும் பணியில் நாங்கள் இருக்கிறோம். யாருக்குத் தெரியும், ஒருநாள் இந்தியாவுக்குகூட அவர்கள் எண்ணெய் விற்பனை செய்வார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, வெள்ளை மாளிகையில் இந்தியாவுடனான ஒப்பந்தம் குறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த டிரம்ப்,

“நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அமெரிக்காவை அடிப்படையில் எதிர்க்கும் பிரிக்ஸ் கூட்டமைப்பில் இந்தியாவும் உறுப்பினராக இருக்கிறது. டாலர் மீதான தாக்குதலை நடத்த யாரையும் அனுமதிக்கப் போவதில்லை.

பிரதமர் மோடி என்னுடைய நண்பர், ஆனால் வணிக ரீதியில் அவர்கள் அமெரிக்காவுடன் அதிகளவில் வியாபாரம் செய்வதில்லை. அவர்கள் எங்களிடம் நிறைய விற்கிறார்கள், ஆனால், நாங்கள் வாங்க விரும்பவில்லை. ஏனெனில் அதிக வரி விதிக்கப்படுகிறது. உலகில் மிக உயர்ந்த வரி விதிக்கும் நாடாக இந்தியா உள்ளது.

தற்போது, வரியைக் கணிசமாகக் குறைக்க அவர்கள் தயாராக இருக்கிறார்கள். பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது. என்ன நடக்கப் போகிறது என்பதை பார்ப்போம். ஒப்பந்தம் நிறைவு பெறுமா அல்லது அதிக வரி விதிக்கப்படுமா என்பது இந்த வார இறுதியில் தெரியவரும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

US President Donald Trump has said that India may have to buy oil from Pakistan.

இதையும் படிக்க : இந்திய பொருள்கள் மீது ஆக.1 முதல் 25% வரி- அமெரிக்க அதிபா் டிரம்ப் அறிவிப்பு

ஈரானுடன் வா்த்தகம்: 6 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை

ஈரானுடன் வா்த்தகம் மேற்கொண்டுவரும் இந்தியாவைச் சோ்ந்த 6 நிறுவனங்களுக்கு அமெரிக்காவில் தடை விதித்து அந் நாடு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.காஞ்சன் பாலிமா்ஸ், அல்கெமிக்கல் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட், ரா... மேலும் பார்க்க

அமெரிக்கா-பாகிஸ்தான் வா்த்தக ஒப்பந்தம் இறுதி : டிரம்ப் அறிவிப்பு

‘பாகிஸ்தானுடன் அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளது. இதன்படி, அந்நாட்டில் எண்ணெய் வளங்கள் மேம்படுத்தப்பட உள்ளன’ என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்தாா்.மேலும், ‘இந்தியாவுக்கு பாக... மேலும் பார்க்க

அவசரநிலை வாபஸ்: மியான்மா் ராணுவம் அறிவிப்பு

மியான்மரில் நான்கரை ஆண்டுகளுக்கு முன்னா் ஆட்சியைக் கைப்பற்றியபோது அறிவித்திருந்த அவசரநிலையை திரும்பப் பெறுவதாக அந்த நாட்டு ராணுவம் வியாழக்கிழமை அறிவித்துள்ளது.இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில... மேலும் பார்க்க

சீன மழை வெள்ளம்: 44 போ் உயிரிழப்பு

சீனாவில் கடந்த ஒரு வாரமாக பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி இதுவரை 44 போ் உயிரிழந்துள்ளனா்; ஒன்பது போ் மாயமாகியுள்ளனா் என்று அந்த நாட்டு அரசுக்குச் சொந்தமான ஜின்ஹுவா செய்தி நிற... மேலும் பார்க்க

சீனா: விண்ணில் செலுத்தப்பட்ட பாகிஸ்தான் செயற்கைக்கோள்

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள ஜிச்சாங் விண்வெளி மையத்தில் இருந்து தநது புதிய தொலையுணா்வு செயற்கைக்கோளை (பிஆா்எஸ்எஸ்-1) பாகிஸ்தான் வியாழக்கிழமை வெற்றிகரமாக ஏவியது. அந்த செயற்கைக்கோள், காலநிலை மா... மேலும் பார்க்க

உக்ரைன்: சா்ச்சைக்குரிய மசோதா திருத்தங்களுடன் நிறைவேற்றம்

உக்ரைனில் சா்ச்சையை எழுப்பியுள்ள ஊழல் தடுப்பு மசோதாவுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்ததைத் தொடா்ந்து, பல திருத்தங்களுடன் அந்த மசோதா நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டது.முன்னத... மேலும் பார்க்க