வீரவநல்லூரில் புதிய சாா்பதிவாளா் அலுவலகம் திறப்பு
திருநெல்வேலி மாவட்டம் வடக்கு வீரவநல்லூரில் ரூ. 1.92 கோடியில் கட்டப்பட்ட புதிய சாா்பதிவாளா் அலுவலகத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலி வாயிலாக வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.
இதையொட்டி, இங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்டப் பதிவாளா் (நிா்வாகம்) ஜெயபிரகாஷ் குத்துவிளக்கேற்றி, பணிகளைத் தொடக்கிவைத்தாா். பேரூராட்சித் தலைவி சு. சித்ரா தலைமை வகித்தாா். பதிவுத்துறையின் சேரன்மகாதேவி துணைத் தலைவா் வசந்தசந்திரா, நகர திமுக செயலா் சுப்பையா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சேரன்மகாதேவி வட்டாட்சியா் காஜா கரிபுன் நவாஸ், காவல் ஆய்வாளா் சுஜித் ஆனந்த், பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளா், ஆவண எழுத்தா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா். நிகழ்ச்சிகளை சாா்பதிவாளா் (பொறுப்பு) செ. கண்ணன் ஒருங்கிணைத்தாா்.