தி கேரளா ஸ்டோரி: `சங் பரிவார சித்தாந்த கதைக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம்' - பினராய...
டாடா பவர் லாபம் ரூ.1,262 கோடியாக அதிகரிப்பு!
புதுதில்லி: புதுப்பிக்கத்தக்க மற்றும் பரிமாற்றம் மற்றும் விநியோக வணிகத்திலிருந்து அதிக வருவாய் கிடைத்ததன் காரணமாக, ஜூன் வரையான காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 6%-க்கும் மேலாக உயர்ந்து ரூ.1,262 கோடியாக உள்ளது.
2024 ஜூன் முடிய உள்ள காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.1,189 கோடியாக இருந்ததாக நிறுவனம் தெரிவித்ததது.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ரூ.16,810 கோடியாக இருந்த வருவாய் இந்த காலாண்டில் அது ரூ.17,464 கோடியாக உயர்ந்துள்ளது.
மின் உற்பத்தி மற்றும் பரிமாற்றம் மற்றும் விநியோகத் தொழில்கள் குறிப்பிடத்தக்க லாபத்தை ஈட்டி வருவதாகவும் டாடா பவரின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர் பிரவீர் சின்ஹா தெரிவித்தார்.
நிறுவனம் 1 கோடியே 30 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு நம்பகமான மின்சாரத்தை வழங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ.87.53 ஆக நிறைவு!