உடுமலை விசாரணைக் கைதி மரணம்: வனத்துறை காவலர்கள் இருவர் பணியிடை நீக்கம்!
ஜூலை மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.96 லட்சம் கோடியாக அதிகரிப்பு!
புதுதில்லி: உள்நாட்டு வருவாய் அதிகரித்ததன் காரணமாக ஜூலை மாதத்தில் மொத்த ஜிஎஸ்டி வசூல் 7.5 சதவிகிதம் அதிகரித்து சுமார் ரூ.1.96 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
2024 ஜூலையில் மொத்த சரக்கு மற்றும் சேவை வரி வசூல் ரூ.1.82 லட்சம் கோடியாக இருந்தது. இதுவே கடந்த மாதம் ரூ.1.84 லட்சம் கோடியாகயாக இருந்தது.
மொத்த உள்நாட்டு வருவாய் 6.7 சதவிகிதம் அதிகரித்து ரூ.1.43 லட்சம் கோடியாக இருந்தது. அதே நேரத்தில் இறக்குமதி வரி 9.5 சதவிகிதம் அதிகரித்து ரூ.52,712 கோடியாக உள்ளது.
ஜிஎஸ்டி பணத்தைத் திரும்பப் பெறுதல் ஆண்டுக்கு ஆண்டு 66.8 சதவிகிதம் அதிகரித்து ரூ.27,147 கோடியாக உள்ளது.
ஜூலை 2025ல் நிகர ஜிஎஸ்டி வருவாய் ரூ.1.69 லட்சம் கோடியாக இருந்தது. இது ஆண்டுக்கு ஆண்டு 1.7 சதவிகித வளர்ச்சியைப் பதிவு செய்து வருகிறது.