AI-யின் தாக்கமா? 4 முறை வேலையை இழந்த மென்பொருள் பொறியாளர் - என்ன காரணம் கூறுகிறா...
பிஎன்பி ஹவுசிங் ஃபைனான்ஸ் பங்குகள் 18% சரிவு!
புதுதில்லி: பிஎன்பி ஹவுசிங் ஃபைனான்ஸின் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான கிரிஷ் கௌஸ்கி தனது ராஜினாமாவை அறிவித்ததையடுத்து நிறுவனத்தின் பங்குகள் 18% சரிந்தன.
பிஎஸ்இ-யில் அதன் பங்கு 18.06 சதவிகிதம் சரிந்து ரூ.808.05 ஆக இருந்தது. பகலில் அது 18.54 சதவிகிதம் சரிந்து ரூ.803.30ஆக இருந்தது.
என்எஸ்இ-யில் அதன் பங்கு 17.74 சதவிகிதம் சரிந்து ரூ.811.15 ஆக உள்ளது.
ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட வாரியம், அக்டோபர் 28, 2025 முதல் அமலுக்கு வரும் என்றும், மேலும் அதன் துணை நிறுவனங்களிலிருந்தும் கௌஸ்கி விலகுவார் என்றது.
கௌஸ்கி கட்டியெழுப்ப உதவிய வலுவான அடித்தளத்தின் அடிப்படையில் வணிக கவனம் மற்றும் வளர்ச்சிப் பாதை உறுதியாக இருப்பதாக நிறுவனம் உறுதிப்படுத்தி உள்ளாதக பிஎன்பி ஹவுசிங் ஃபைனான்ஸ் தெரிவித்துள்ளது.
வாரியத்தின் நியமனம் மற்றும் ஊதியக் குழுவின் தலைவர் ஆர். சந்திரசேகரன், பிஎன்பி ஹவுசிங் ஃபைனான்ஸின் பாரம்பரியத்தை மேலும் மேம்படுத்தும் புதிய தலைவரை விரைவில் நியமிக்க நிறுவனம் கடுமையான, வெளிப்படையான மற்றும் தகுதி அடிப்படையிலான தேர்வு செயல்முறையைத் தொடங்கும் என்றார்.
இதையும் படிக்க: டாடா பவர் லாபம் ரூ.1,262 கோடியாக அதிகரிப்பு!