செய்திகள் :

Doctor Vikatan: சித்த மருத்துவம் பரிந்துரைக்கும் கற்பூராதி தைலம்; எல்லோரும் பயன்படுத்தலாமா?!

post image

Doctor Vikatan: குழந்தைகளுக்கு சளி, மூச்சுத்திணறல் ஏற்படும்போது கற்பூரம் பயன்படுத்துவது மிகவும் ஆபத்தானது என்கிறார்கள் ஆங்கில மருத்துவர்கள். ஆனால்,  சித்த மருத்துவத்தில் கற்பூராதி தைலம் பயன்பாட்டில் இருக்கிறதே... அது கற்பூரம் கொண்டு செய்யப்படுவதா... அதைப் பயன்படுத்துவதால் பாதிப்புகள் வராதா... அதை எந்தெந்தப் பிரச்னைகளுக்கு எப்படிப் பயன்படுத்த வேண்டும்?

பதில் சொல்கிறார், திருப்பத்தூரைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் விக்ரம்குமார்

கட்டுரையாளர்: சித்த மருத்துவர் வி. விக்ரம்குமார்

கற்பூராதி தைலம் என்பது பன்னெடுங்காலமாக சித்த மருத்துவத்தில் இருக்கும் ஒரு மருந்து. மக்களிடம் பல காலமாகப் பயன்பாட்டில் இருக்கும் மருந்துகளில் இது முக்கியமானதும்கூட.

கற்பூராதி தைலம் சரியாக, முறையாகத் தயாரிக்கப்பட்டதா என்பதுதான் இங்கே முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம். கற்பூராதி தைலம் தயாரிக்க பூங்கற்பூரத்தையே பயன்படுத்துவார்கள்.  அதாவது பூங்கற்பூரத்தை தேங்காய் எண்ணெயில் சேர்த்துக் காய்ச்சித் தயாரிப்பார்கள்.  தேங்காய் எண்ணெயில் குறிப்பிட்ட அளவு மட்டுமே பூங்கற்பூரம் சேர்க்கப்படும். அது எண்ணெயாகத் தயாராகி வரும் பக்குவத்தில், கற்பூரத்தின் அதிகபட்ச வீரியம் குறைந்துவிடும். கற்பூராதி தைலம் என்பது முழுக்க முழுக்க வெளிப்பிரயோகத்துக்கான மருந்து என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

முதுகுவலி, இடுப்புவலி, மூட்டுவலி போன்றவற்றுக்கு அந்த இடத்தில் மட்டும் லேசாகத் தடவிக் கொள்ளலாம்.

தசைவலிகளுக்கு இந்த எண்ணெயைப் பயன்படுத்தலாம். முதுகுவலி, இடுப்புவலி, மூட்டுவலி போன்றவற்றுக்கு அந்த இடத்தில் மட்டும் லேசாகத் தடவிக் கொள்ளலாம். இந்த எண்ணெயை லேசாக சூடாக்கி, வலியுள்ள இடத்தில் தடவினால், அதன் விறுவிறுப்புத் தன்மை வலியிலிருந்து நிவாரணம் கொடுப்பதைப் பார்க்கலாம். கற்பூராதி தைலத்தின் வாசனை காரணமாக, மூக்கின் அருகே கொண்டு செல்வது, மூக்கில், முகத்தில் தடவுவதெல்லாம் தவிர்க்கப்பட வேண்டும். 

வலிகளுக்குத் தடவும்போது, அதில் உள்ள கற்பூரமானது சருமத்தின் வழியே ஊடுருவி உள்ளே போகும் அளவுக்கெல்லாம் இருக்காது. குழந்தைகளுக்கு எந்த மருந்தையும் மருத்துவரின் ஆலோசனையின்றி உபயோகிக்கவே கூடாது. எந்த மருந்து, எப்படிப்பட்ட ஒவ்வாமையை ஏற்படுத்தும் என்று சொல்ல முடியாது. பெரியவர்கள், தாராளமாக கற்பூராதி தைலம் உபயோகிக்கலாம். உள்ளுக்கு எடுத்துக்கொள்ளும் மருந்தல்ல என்பதால், இதில் பயமும் இல்லை.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.  

Vitamin D : `வெயிலில் காய்ந்த உப்பில் வைட்டமின் டி இருக்குமா?' - வைட்டமின் டி குறித்த முழு தகவல்கள்

உங்கள் ஆயுள் அதிகரிக்க வேண்டுமென்றால், உங்கள் உடலில் வைட்டமின் டி மிக மிக அவசியம். அதனால்தான், அந்தக் காலத்தில் 'சூரிய ஒளி புகாத வீட்டுக்குள் வைத்தியர் அடிக்கடி புகுவார்' என்பார்கள். அதாவது, சூரிய ஒளி... மேலும் பார்க்க

Apollo: ‘எண்டு-ஓ செக்’-ஐ அறிமுகம் செய்த அப்போலோ!

பெண்களுக்கு புற்றுநோய் வராமல் தடுப்பதற்கான செயல்திட்டத்தின் மீது அர்ப்பணிப்புடன் செயல்படும் அப்போலோ கேன்சர் சென்டர் (ACC) மற்றும் அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டர் (APCC) எண்டு-ஓ செக் (End-O Check) எ... மேலும் பார்க்க

CRIB: இந்தியாவில் புதிய வகை ரத்தம் கண்டுபிடிப்பு! - விவரம் என்ன?

இதுவரை உலகம் முழுக்க 47 வகை ரத்தப்பிரிவுகள் ஆராய்ச்சியாளர்களால் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றில் ஏ, பி, ஏபி, ஓ எனும் நான்கு வகைகள் மிக முக்கியமானவை. முதன் முதலில் ஆஸ்திரிய நாட்டை சேர்ந்த கார்ல் லான்ஸ்டீனர... மேலும் பார்க்க

உதகை: அரசு மருத்துவமனையில் பேட்டரி சேவை அறிமுகம்!

உதகை அரசு மருத்துவக் கல்லூரியில், கல்லூரியின் நிதியில் வாங்கப்பட்ட பேட்டரி வாகனம், நுழைவாயிலிலிருந்து ஓ.பி பிளாக் வரை செல்லும் நோயாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கும் சேவை, நிர்வாகம் சார்பில... மேலும் பார்க்க

சிக்கலான உயர் அபாய ஆஞ்சியோபிளாஸ்ட்டி சிகிச்சையில் மைல்கல்லை எட்டிய அருணா கார்டியாக் கேர்

திருநெல்வேலியில் உள்ள அருணா கார்டியாக் கேர் மருத்துவமனை, இதயவியல் துறையில் முக்கியமான முன்னேற்றமாக, முதல் முறையாக இண்டோ-போலிஷ் (INDO-POLISH) லேசர் ஆஞ்சியோபிளாஸ்ட்டி பயிலரங்கை வெற்றிகரமாக நடத்தியது. இந... மேலும் பார்க்க

Doctor Vikatan: ஃபேன்சி பைக், long ride.. முதுகுவலியை ஏற்படுத்துமா?

Doctor Vikatan: என்மகனுக்கு 22 வயதாகிறது. அவனுக்குபைக் ஓட்டுவதில் அலாதி ஆர்வம். ஃபேன்சி பைக் வைத்திருக்கிறான். வார இறுதி நாள்களில் நண்பர்களோடுசேர்ந்து நீண்ட தூரம் பைக் ரைடு செல்கிறான். அப்படிச்செல்வது... மேலும் பார்க்க