செய்திகள் :

உலகின் முதல் ஏஐ மசாஜ் சேவையை அறிமுகப்படுத்திய நிறுவனம்: மனித வேலைகளுக்கு சவாலா?

post image

கடந்த இரண்டு ஆண்டுகளில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சி பன்மடங்கு அதிகரித்துள்ளது. இதனால், மனிதர்களின் வேலைவாய்ப்புகள் குறைவதற்கான அபாயம் அதிகரித்துள்ளதாக வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

அமெரிக்காவைச் சேர்ந்த Aescape என்ற நிறுவனம், உலகின் முதல் AI இயங்கும் மசாஜ் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இது உலகளவில் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

AI மசாஜ்

Aescape நிறுவனத்தின் நிறுவனர் எரிக் லிட்மேன், அறுவை சிகிச்சை ரோபோக்களை ஒத்த ரோபோக்களைப் பயன்படுத்தி AI மசாஜ் சேவையை வழங்குகிறார்.

மசாஜ் தொடங்குவதற்கு முன், வாடிக்கையாளர்கள் Aescape வழங்கும் சிறப்பு உடையை அணிய வேண்டும். இந்த உடை, ரோபோ கைகள் உடலில் தடையின்றி இயங்க உதவுகிறது.

ஏஐ ரோபோ, சென்சார்களைப் பயன்படுத்தி, வாடிக்கையாளரின் உடலுக்கு மசாஜ்களை வழங்குகிறது. இதன் மூலம் மசாஜ் நுட்பங்களை சரியான அழுத்தம் மற்றும் வெப்பநிலையுடன் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மனித தொடுதலுடன் கூடிய மசாஜைப் போலவே இருக்கும் என்று அந்நிறுவனர் கூறியிருக்கிறார்.

Aescape நிறுவனம் இதற்காக பல டாலர்கள் செலவழித்து, சந்தையில் ஒரு இடத்தை பிடிக்க முயற்சித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

AI-யின் தாக்கமா? 4 முறை வேலையை இழந்த மென்பொருள் பொறியாளர் - என்ன காரணம் கூறுகிறார்?

சான் பிரான்சிஸ்கோவைச் சேர்ந்த 59 வயதான மார்க் க்ரிகுயர் என்பவர் 28 ஆண்டுகளாக மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றி வருகிறார். கடந்த 18 ஆண்டுகளில் நான்கு முறை அவர் தனது வேலையை இழந்துள்ளார். சமீபத்தில், வால... மேலும் பார்க்க

UPI: இன்று முதல் யு.பி.ஐ-யில் அமலுக்கு வரும் 7 ரூல்ஸ்; என்னென்ன தெரிந்துகொள்வோமா?

இன்று ஆகஸ்ட் 1. இன்று முதல் யு.பி.ஐ-யில் (UPI) ஒரு சில மாற்றங்கள் வர உள்ளதாக முன்னர் தேசிய பேமென்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா அறிவித்திருந்தது. அவை என்னென்ன என்பதை பார்க்கலாம்... வாங்க...யு.பி.ஐ பரிவர... மேலும் பார்க்க

Google: ரூ.50,000 கோடி; ஆந்திராவில் `ஆசியாவின்' மிகப்பெரிய Data Center; கூகுளின் ப்ளான் என்ன?

50 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் ஆசியாவிலேயே மிகப்பெரிய டேட்டா சென்டரை (Data center.) ஆந்திராவில் அமைக்க கூகுள் நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது. ஆந்திர பிரதேச மாநிலம், விசாகப்பட்டினத்தில் 6 பில்லியன் டாலர்... மேலும் பார்க்க

`AI தொழில்நுட்பங்கள் எந்தெந்த தொழில்களை மாற்றியமைக்கும்?' - மைக்ரோசாப்ட் ஆய்வு சொல்வதென்ன?

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சமீபத்திய ஆய்வு, ஏஐயால் இயக்கப்படும் சாட்பாட் தொழில்நுட்பங்கள் எந்தெந்த தொழில்களை மாற்றியமைக்க வாய்ப்புள்ளது என்பது குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது.மைக்ரோசாப்டின் கோபைலட் (C... மேலும் பார்க்க

உஷார்: ``நல்லவேளை போனை ஸ்விட்ச் ஆஃப் பண்ணீங்க; இல்லைனா ரூ.50,000 போயிருக்கும்'' - அனுபவ பகிர்வு

"என்னை மாதிரியே என் நண்பர் ஒருத்தர் சூப்பர் மார்க்கெட் வெச்சுருக்காரு. அவரு புதுக்கோட்டைய சேர்ந்தவரு. ஆனா, தமிழ்நாட்டுல இருக்க இன்னொரு ஊருல கடை வெச்சுருக்காரு. கடந்த சனிக்கிழமை, அவரோடு கடைப் போனுக்கு ... மேலும் பார்க்க

``பெரிய நிறுவனங்கள் அபாயங்களை மறைக்கின்றன'' - எச்சரிக்கும் Godfather of AI

செயற்கை நுண்ணறிவின் காட் ஃபாதர் எனக் கருதப்படும் ஜெஃப்ரி ஹிண்டன், அதன் வேகமான வளர்ச்சி ஏற்படுத்தும் ஆபத்துகளையும், பெரிய நிறுவனங்கள் அந்த ஆபத்தைப் பொருட்படுத்தாமல் இருப்பதன் விளைவுகளையும் குறித்து எச்... மேலும் பார்க்க