UPI: இன்று முதல் யு.பி.ஐ-யில் அமலுக்கு வரும் 7 ரூல்ஸ்; என்னென்ன தெரிந்துகொள்வோமா?
இன்று ஆகஸ்ட் 1.
இன்று முதல் யு.பி.ஐ-யில் (UPI) ஒரு சில மாற்றங்கள் வர உள்ளதாக முன்னர் தேசிய பேமென்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா அறிவித்திருந்தது.
அவை என்னென்ன என்பதை பார்க்கலாம்... வாங்க...

1. இனி யு.பி.ஐ ஆப்களில் ஒரு நாளுக்கு 50 முறை மட்டுமே பேலன்ஸ் செக் செய்ய முடியும். வேறு வேறு யு.பி.ஐ ஆப் வைத்திருந்தீர்கள் என்றால், ஒவ்வொரு ஆப்பிலும் 50 முறை செக் செய்யலாம்.
2. எந்த நேரத்தில் வேண்டுமானாலும், இந்தத் தொகை இவருக்கு செல்ல வேண்டும் என்று செட் செய்யும் 'Scheduled Auto- payments' வசதி இதுவரை யு.பி.ஐ-களில் இருந்தது.
ஆனால், இனி இந்தப் பேமென்ட்டுகளை காலை 10 மணிக்கு முன்பு, மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை, இரவு 9.30 மணிக்கு பிறகு தான் செய்ய முடியும்.
3. யு.பி.ஐ-யில் நீங்கள் செய்யும் பேமென்டுகள் சக்சஸ்ஸா, இல்லையா என்பதைத் தெரிந்துகொள்ள மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய அவசியம் இப்போது இல்லை. இன்று முதல் ஒரு சில நொடிகளில் இந்த அப்டேட்டை தெரிந்துகொள்ளலாம்.
4. உங்கள் பரிவர்த்தனையின் 'ஸ்டேட்டஸை' அதாவது சக்சஸா, இல்லையா என்பதை இனி மூன்று முறை மட்டுமே செக் செய்ய முடியும். அதுவும் 90 நொடிகள் இடைவெளிகளில் தான் செக் செய்ய முடியும்.
5. நீங்கள் உங்களது யு.பி.ஐ-யை எந்தெந்த வங்கி கணக்குகளுடன் இணைத்திருக்கிறீர்கள் என்பதை ஒரு நாளைக்கு 25 முறை மட்டுமே பார்க்க முடியும்.

6. நீங்கள் யாருக்காவது தவறாக பணம் அனுப்புகிறீர்கள், அதை திரும்ப பெறும் 'Payment Reversal Request'-ஐ இன்று முதல் ஒரு மாதத்திற்கு 10 முறை மட்டுமே செய்ய முடியும். அதுவும் ஒருவருக்கே திரும்ப திரும்ப தவறாக பணம் அனுப்பப்பட்டிருந்தால், அவரிடம் இருந்து அதிகபட்சமாக 5 முறை மட்டுமே ரிவர்சல் பேமென்ட் பெற முடியும்.
7. இனி நீங்கள் யாருக்காவது பணம் அனுப்புகிறீர்கள் என்றால், நீங்கள் பணம் அனுப்புவதற்கு முன்பு, அவருடைய வங்கியின் பெயர் உங்களுக்கு தெரியும். இதன் மூலம் மோசடிகள் மற்றும் தவறுகளைத் தவிர்க்கலாம்.
இந்தப் புதிய விதிமுறைகளைத் தெரிந்துகொண்டு இனி யு.பி.ஐ-யில் பரிவர்த்தனை செய்யுங்க மக்களே...!
Business, Money, Invest, Personal Finance தொடர்பான Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4
வணக்கம்,
Personal Finance, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை, முதலீடு, சேமிப்பு போன்றவைகளில் பக்கா அப்டேட்டுகளும், ஆலோசனைகளும்.
கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...