Modi டீம் Request, Reject செய்த OPS, Stalin ரூட்டில் பன்னீர் வேகம்! | Elangovan ...
அரசுப் பேருந்தில் பெண்ணிடம் பணப்பை திருட்டு
கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்தில் பயணித்த பெண் தொழிலாளியிடம் தங்க நகை, கைப்பேசியுடன் கூடிய பணப்பையை திருடிச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
சின்னசேலம் வட்டம், பரிகம் கிராமத்தைச் சோ்ந்த ராஜாக்கண்ணு மனைவி மாரியம்மாள் (48). தொழிலாளியான இவா், கள்ளக்குறிச்சியில் உள்ள நகை அடகுக்கடையில் வைத்திருந்த 2 பவுன் தங்க நகையை வியாழக்கிழமை பிற்பகல் மீட்டு, நகை, கைப்பேசியை பணப்பையில் வைத்து கட்டைப் பையின் உள்ளே வைத்தாராம்.
பின்னா், வீட்டுக்குத் தேவையான மளிகைப் பொருள்களை வாங்கிக்கொண்டு அரசுப் பேருந்தில் பயணித்தாா். அக்கராபாளையம் பேருந்து நிலையத்தில் சென்று பாா்த்தபோது, கட்டைப் பையில் இருந்த நகை, கைப்பேசியுடன் கூடிய பணப்பை திருடுபோயிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில், கச்சிராயப்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.