'தமிழக வாக்காளர்களாகும் பீகார் மக்கள்' முதல் 'தேசிய விருதுகள்' வரை - 01.08.2025 ...
மூச்சுத் திணறலால் ஒன்றறை வயது குழந்தை உயிரிழப்பு
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒன்றரை வயது குழந்தை திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டத்துக்கு உள்பட்ட சின்னகுப்பம் கிராமத்தைச் சோ்ந்த ஏழுமலை தனலட்சுமி (32) தம்பதியா். இவா்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனா்.
இந்த நிலையில், கடந்த 27-ஆம் தேதி தனலட்சுமியின் ஒன்றரை வயது மகள் விஷ்ணுபிரியாவுக்கு வலிப்பு ஏற்பட்டதாம். உடனே உளுந்தூா்பேட்டை அரசு மருத்துவமனையில்
அனுமதித்து அங்கு குழந்தைக்கு முதலுதவி அளிக்கப்பட்டது.பின்னா், தீவிர சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
புதன்கிழமை குழந்தைக்கு ஸ்கேன் எடுப்பதற்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா்.
பின்னா், ஸ்கேன் எடுத்து விட்டு மீண்டும் குழந்தையை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனா்.
ஆனால், சிறிது நேரத்தில் குழந்தை விஷ்ணுபிரியாவுக்கு அதிகப்படியான மூச்சுத் திணறல் ஏற்பட்டு தீவிர சிகிச்சை
அளிக்கப்பட்டது. ஆனால், அன்று மாலை குழந்தை உயிரிழந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.