தாய் - சேய்க்கு எச்ஐவி பாதிப்பு! 6 மாத மகன் கொலை!
மும்பையில் 6 மாத குழந்தையை கொலை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர்.
மும்பையில் கோவந்தி நகரில் ஓர் ஆலையில் பணிபுரிந்து வந்த 43 வயதான பெண்ணுக்கும், அவரது 6 மாத மகனுக்கும் எச்ஐவி பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
இதனிடையே, தனது குழந்தையை வளர்க்கும் அளவுக்கு நிதிநிலையின்றி அவரது தாய் இருந்துள்ளார்.
இந்த நிலையில், தனது குழந்தையின் முகத்தில் தலையணையை அழுத்தி, மூச்சுத் திணற செய்துள்ளார்.
தொடர்ந்து, தான் வேலைபார்த்து வந்த ஆலையில் தனது சக ஊழியருடன் இதனைச் சொல்லியிருக்கிறார்போல. இதனையடுத்து, இருவருக்கும் ஏதோ வாக்குவாதம் ஏற்பட, பிரச்னையைத் தீர்க்க ஆலைக்குள் காவல்துறையினரும் வந்துள்ளனர்.
இந்த நிலையில்தான், குழந்தை மீது கொலை முயற்சி செய்யப்பட்டிருப்பதும் காவல்துறையின் விசாரணையில் தெரிய வந்தது.
இதனையடுத்து, பெண்ணின் வீட்டில் இருந்து குழந்தை மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாலும், குழந்தை உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்து விட்டனர்.
பெண்ணை கைது செய்த காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.