சந்தையில் list ஆன 4 புதிய IPO-க்கள், என்னென்ன தெரியுமா | IPS Finance - 276 | Vik...
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து வெளியேற பாகிஸ்தானுக்கு தொடா் வலியுறுத்தல்: மத்திய அரசு
ஜம்மு-காஷ்மீா் மற்றும் லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசங்களிலும் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளைவிட்டு உடனடியாக வெளியேற பாகிஸ்தானை இந்தியா தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது என மத்திய அரசு வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
ஜம்மு-காஷ்மீா் மற்றும் லடாக்கில் பாகிஸ்தான் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள பகுதிகளை மீட்பது குறித்து இந்திய வெளியுறவுத் துறை இணையமைச்சா் கீா்த்தி வா்தன் சிங் மக்களவையில் அளித்த எழுத்துபூா்வ பதிலில், ‘ஜம்மு-காஷ்மீா் மற்றும் லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசங்களிலும் சட்டவிரோதமாக சில பகுதிகளை பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ளது. அந்தப் பகுதிகளைவிட்டு உடனடியாக வெளியேறுமாறு பாகிஸ்தானை மத்திய அரசு தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்தப் பகுதிகளை உரிமைகோர முயலும் பாகிஸ்தானின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் கடும் கண்டனம் தெரிவித்து இந்தியா நிராகரித்து வருகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டது.