"இந்தியாதான் அமெரிக்காவையே வழிநடத்துகிறது" - ட்ரம்ப் பேச்சு குறித்து அண்ணாமலை
மலையாள நடிகர் கலாபவன் நவாஸ் விடுதி அறையில் மரணம்
கொச்சி: மலையாள திரைப்பட நடிகர் கலாபவன் நவாஸ், சோட்டானிக்கரையில் உள்ள விடுதி அறையிலிருந்து சடமாக மீட்கப்பட்டுள்ளார்.
படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக விடுதியில் அறை எடுத்துத் தங்கி வந்த நவாஸ் (51) வெகு நேரமாக அறையைத் திறக்காததால், விடுதி ஊழியர்கள் காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்த நிலையில் காவல்துறையினர் விரைந்து வந்து, மயங்கிய நிலையில் இருந்த அவர், அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்ததாக போலீசார் தெரிவித்தனர்.
அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
திரைத்துறையில் பல்வேறு கதாப்பாத்திரங்களை ஏற்று நடித்திருக்கும் கலாபவன் நவாஸ், மலையாள சினிமாவில் மிமிக்ரி கலைஞர், பின்னணிப் பாடகர் மற்றும் நடிகராக பன்முகத் திறன் பெற்றவராகவும் விளங்கினார். அவரது மறைவுக்கு முதலமைச்சர் பினராயி விஜயன் இரங்கல் தெரிவித்துள்ளார்