மனைவி தனது காதலனுடன் பழகி வந்ததாக சந்தேகப்பட்ட கணவன் இரு குழந்தைகளுடன் தற்கொலை!
ஒரே ஓவரில் 45 ரன்கள்... 43 பந்தில் 153 ரன்கள் குவித்த ஆப்கன் வீரர்!
ஆப்கன் வீரர் உஸ்மான் கனி ஒரே ஓவரில் 45 ரன்கள் எடுத்து உலக சாதனை படைத்துள்ளார்.
இங்கிலாந்தில் இசிஎஸ் டி10 போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் லண்டன் கவுன்டி கிரிக்கெட் அணியும் கில்ட்ஃபோர்டு அணியும் மோதின.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லண்டன் கவுன்டி கிரிக்கெட் அணி 10 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 226 ரன்கள் எடுத்தது.
இதில் இந்த அணியில் கேபட்ன் உஸ்மான் கனி 43 பந்தில் 153 ரன்கள் எடுத்தார். இதில் 11 பவுண்டரி, 17 சிக்ஸர்கள் அடங்கும்.
கில்ட்ஃபோர்டு பந்து வீச்சாளர் வில் எர்னியின் வீசிய ஒரே ஓவரில் 45 ரன்களை எடுத்து உஸ்மான் கனி பெரும் சேதத்தை ஏற்படுத்தினார்.
ஒரே ஓவரில் 6+ நோ பால், 6, 4+ வைட், 6, 4+ நோ பால், 6, 0, 6, 4 என மொத்தம் 45 ரன்கள் எடுத்தார்.

அடுத்து விளையாடிய கில்ட்ஃபோர்டு அணி 155/4 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக ஆஸ்கர் மிகைல் 47, டோமனிக் 33 ரன்கள் எடுத்தார்கள்.
இந்தப் போட்டியில் 71 ரன்கள் வித்தியாசத்தில் லண்டன் கவுன்டி கிரிக்கெட் அணி வென்றது.
உஸ்மான் கனி (28 வயது) ஆப்கான் நாட்டைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.