செய்திகள் :

"மிதப்பதாக நினைத்து லேப்டாப்ப கீழ போட்டுட்டேன்" - விண்வெளிக்குப் பிறகான வாழ்க்கை குறித்து சுபன்ஷு

post image

இந்தியாவில் லக்னோவைச் சேர்ந்த சுபன்ஷு சுக்லா தனது 'Axiom-4' விண்வெளிப் பயணத்தை முடித்துவிட்டு வீடு திரும்பினார். 1984-ம் ஆண்டு ராகேஷ் சர்மாவின் விண்வெளி பயணத்திற்குப் பிறகு, இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் விண்வெளிக்குச் சென்றது இதுவே முதல்முறையாகும்.

கடந்த சில வாரங்களாக வீட்டில் ஓய்விலிருந்து வரும் சுபன்ஷு சுக்லா, விண்வெளியில் மிதந்துவிட்டு, இங்குப் பூமியில் ஈர்ப்பு விசையை உணர்வது பற்றியும் இயல்பு வாழ்க்கைக்குப் பழகுவது பற்றியும் மனம் திறந்து பேசியிருக்கிறார்.

சுபன்ஷு சுக்லா
சுபன்ஷு சுக்லா

இதுகுறித்துப் பேசியிருக்கும் சுபன்ஷு சுக்லா, "பூமிக்கு வந்து கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கும், புவியீர்ப்பு விசையையும் பழகி வருகிறேன். விண்வெளியில் எதையும் அப்படியே அருகில் போட்டுவிடுவேன், அது அங்குப் புவியீர்ப்பு இல்லாததால் மிதக்கும். அந்தப் பழக்கத்தில் விட்டில் படுகையிலிருந்தபடி லேப்டாப்பைப் பக்கத்தில் தூக்கிப் போட்டேன்.

அது கீழே விழுந்துவிட்டது. போன் கூட நிறைய எடை இருப்பதாகத் தெரிகிறது. விண்வெளியில் இருந்துவிட்டு இங்கு இருப்பது ரொம்ப வித்தியாச இருக்கு. கொஞ்சம் கொஞ்சமாக இங்குப் புவியீர்ப்பு விசையைப் பழகி வருகிறேன். இதுவும் நல்லாதான் இருக்கு.

என் குழந்தைக்கு விண்வெளி வீரராக விண்வெளிக்குச் செல்ல வேண்டும் என்ற ஆசை வந்திருக்கிறது. இன்று இந்தியாவில் இருக்கும் பல குழந்தைகளுக்கும் அதுபோன்ற ஆசை வந்திருக்கிறது என்பது மகிழ்சியான ஒன்று. அவர்களுக்கெல்லாம் ஏதொவொரு வகையில் நான் ஊக்கமாக இருப்பது மகிழ்ச்சி" என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

ISRO: ககன்யான் திட்டத்தில் விண்வெளிக்கு செல்லும் பெண் ரோபோ `வியோமித்ரா' - என்ன செய்யும்?

ககன்யான் திட்டத்திற்காக வருகிற டிசம்பர் மாதம் விண்ணில் ஏவப்பட உள்ள ஆள் இல்லாத சோதனை ராக்கெட்டில் 'வியோமித்ரா' (Vyommitra) என்ற பெண் ரோபோ பயணம் செய்கிறது என்று இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்திருக்கிறார... மேலும் பார்க்க

``என் பணியின் மீதும் ஆர்வம் காட்டிய அனைத்து இந்தியர்களுக்கும் நன்றி..'' - சுபான்ஷு சுக்லா

அமெரிக்காவின், 'ஆக்சியம் ஸ்பேஸ்' என்ற தனியார் நிறுவனம், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கானப் பயண திட்டத்தில் ஈடுபட்டது. அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா மற்றும் இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வ... மேலும் பார்க்க

Shubhanshu Shukla: `கடலில் இறங்கியது’ - விண்வெளி பயணத்தை முடித்து பூமி திரும்பினார் சுபன்ஷு சுக்லா

சுபன்ஷு சுக்லா வெற்றிகரமாக விண்வெளியில் இருந்து பூமி திரும்பியுள்ளார். 1984-ம் ஆண்டு ராகேஷ் சர்மாவின் விண்வெளி பயணத்திற்குப் பிறகு, இந்தியாவை சேர்ந்த ஒருவர் விண்வெளிக்கு சென்றது இதுவே முதல்முறை. இவர்... மேலும் பார்க்க

Axiom-4 mission: பூமி திரும்பும் சுபான்ஷு சுக்லா குழு; உற்சாக வரவேற்பு அளிக்க நாசா ஏற்பாடு

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ மற்றும் அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவுடன் இணைந்து 2025-ல் `ஆக்ஸியம் ஸ்பேஸ் ஆக்ஸ்- 4' என்ற திட்டத்தை செயல்படுத்தியது. அதன்படி சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வீ... மேலும் பார்க்க