'நயினாருக்கு எதிராக ஓபிஎஸ்' டு Coolie இசை வெளியீட்டு விழா; 02.08.2025 முக்கிய செ...
Coolie: "1421 - இது என் தந்தைக்குச் செய்யும் டிரிப்யூட்" - 'கூலி' சீக்ரெட்ஸ் சொல்லும் லோகேஷ் கனகராஜ்
லோகேஷ் கனராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் 'கூலி' திரைப்படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் பிரமாண்டமான முறையில் நடைபெற்று வருகிறது.

ஆமீர் கான், நாகர்ஜூனா, செளபின் சாஹிர் எனப் படத்தின் முக்கிய நடிகர்கள் அனைவரும் இந்த நிகழ்வுக்கு வந்திருக்கிறார்கள்.
இந்த நிகழ்வில் லோகேஷ் கனகராஜ் பேசுகையில், "இப்படத்தின் ரிலீஸுக்குப் பிறகு நடிகர் செளபின் சாஹிர்தான் டாக் ஆஃப் தி டவுனாக இருப்பார். இந்தப் படத்தின் அவருடைய கதாபாத்திரம் அதிகமாகப் பேசப்படும்.
இந்தப் படத்திற்குப் பிறகு அவரை தமிழ் சினிமாவில் நடிக்க வைக்க பலரும் தேடுவார்கள். அவர் அனேகமாக சென்னைக்குத் தனது இருப்பிடத்தை ஷிஃப்ட் செய்துவிடுவார் என நினைக்கிறேன்.
உபேந்திரா சார் அர்ப்பணிப்புடன் பணிபுரியக்கூடியவர். முழு ஈடுபாட்டுடன் படப்பிடிப்பில் எங்களுக்கு உறுதுணையாக இருந்தார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக ஷ்ருதி ஹாசன்தான் எங்களுக்குப் பெரிய சப்போர்ட்டாக இருந்தார்.
நாகர்ஜுனா சாரை இப்படத்தின் சைமன் கதாபாத்திரத்திற்குச் சம்மதித்து முதலில் நடிக்க வைப்பதற்குக் கொஞ்ச நேரமெடுத்தது.

ஆனால், அதிரடியான எனர்ஜியை படத்திற்குக் கொண்டு வந்திருக்கிறார். அவரைப் பார்த்துத்தான் நான் ஃபங்க் ஹேர் ஸ்டைல் வைக்கத் தொடங்கினேன்.
ஆமீர் கான் சாருடன் பிறந்தநாளை இணைந்து கொண்டாடுவதைப் பெருமையாகக் கருதுகிறேன். அவரை வைத்து இயக்குவது என்னுடைய கனவு. அது இப்போது நிறைவேறியிருக்கிறது.
ரஜினி சாரை பற்றிப் பேசுவதற்குச் சில நிமிடங்கள் போதாது. அவருடைய பயணித்த இந்த இரண்டு ஆண்டுகள் என் வாழ்க்கையை மாற்றியிருக்கிறது.
அவையெல்லாம் அனுபவங்களால் நிறைந்தவை. உங்களுடைய 50 ஆண்டுக்கால சினிமா பயணத்தைக் கொண்டாடும் வகையில் அதே ஆகஸ்ட் மாதத்தில் 'கூலி' திரைப்படம் வெளியாவதைப் பெருமையாக் கருதுகிறேன்.
இந்தத் தருணத்தை என்றென்றும் பெருமையுடன் போற்றுவேன். இந்தத் திரைப்படம் உருவாகுவதற்குக் காரணமே அனிருத்தான். அனிருத் எனக்குச் சகோதரரைப் போன்றவர்.

என்னுடைய தந்தை பேருந்து நடத்துனராக இருந்தவர். அவருடைய 'கூலி' என் 1421.
அதே எண்ணைத்தான் இப்படத்தில் ரஜினி சாருக்குப் பயன்படுத்தியிருக்கிறேன். இது என் தந்தைக்கு நான் செலுத்தும் டிரிப்யூட். " எனக் கூறியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...