'நயினாருக்கு எதிராக ஓபிஎஸ்' டு Coolie இசை வெளியீட்டு விழா; 02.08.2025 முக்கிய செ...
ஆகஸ்ட் 3: சகோதரிகள் நாள்..! கொண்டாடத் தயாரா?
சகோதரிகள் நாள் எப்படி உருவானது தெரியுமா? சகோதரத்தைப் போற்றும் வகையில் ரக்ஷா பந்தன் கொண்டாடப்படுவது போல, பல நாடுகளில் சகோதரிகள் நாளும் கொண்டாடப்படுகிறது.
வழக்கமாக ஆகஸ்ட்டில் முதல் ஞாயிற்றுக்கிழமையன்று சகோதரிகள் நாள் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், இந்த வருடம் ஆகஸ்ட் 3 சகோதரிகள் நாள் கொண்டாடப்படுகிறது.
சகோதரிகள் நாள் வரலாறு:
அமெரிக்காவில் கடந்த 1996-ஆம் ஆண்டில், திரிஷியா எலியோகிராம் தனது பாசத்துக்குரிய சகோதரி தென்னெஸ்ஸியுடன் இணைந்து அக்கா - தங்கை உறவையும், அதனுள் இருக்கும் பிணைப்பையும் சிறப்பிக்க ‘சகோதரிகள் நாள்’ கொண்டாட தீர்மானித்துள்ளார்.
அன்றிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட்டில் முதல் ஞாயிற்றுக்கிழமை ‘சகோதரிகள் நாள்’ அமெரிக்காவில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. காலப்போக்கில் பிற நாடுகளிலும் இந்த கொண்டாட்டம் பரவியுள்ளது.
இதே ஆகஸ்ட் முதல் ஞாயிறன்று இந்தியாவில் தோழமை நாள்(பிரண்ட்ஷிப் டே) கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது..!