'நயினாருக்கு எதிராக ஓபிஎஸ்' டு Coolie இசை வெளியீட்டு விழா; 02.08.2025 முக்கிய செ...
Coolie: "வெங்கட் பிரபு அஜித்துக்கு ஒரு வசனம் எழுதியிருப்பார்; அது மாதிரிதான் நாகர்ஜுனா" - ரஜினி
லோகேஷ் கனராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் 'கூலி' திரைப்படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் பிரமாண்டமான முறையில் நடைபெற்று வருகிறது.

ஆமீர் கான், நாகர்ஜுனா, செளபின் சாஹிர் எனப் படத்தின் முக்கிய நடிகர்கள் அனைவரும் இந்த நிகழ்வுக்கு வந்திருக்கிறார்கள்.
இந்த விழாவில் ரஜினிகாந்த் பேசும்போது, "லோகேஷ் கனகராஜ் இரண்டு மணி நேரத்திற்குப் பேட்டிக் கொடுத்திருக்காரு. அதைப் படுத்திருந்து பார்த்தேன், முடியல.
உட்கார்த்துப் பார்த்தேன், முடியல. தூங்கி எழுந்துப் பார்த்தேன், அப்போதும் முடியல" என்றவர், "எனக்கும் சத்யராஜுக்கும் கருத்து ரீதியாக முரண் இருக்கலாம்.
ஆனால், அவர் மனசுலப் பட்டத சொல்லிட்டு போயிடுவாரு. மனசுல பட்டத சொல்றவங்களை நம்பலாம். ஆனால், உள்ளையே வச்சுட்டு இருக்கிறவங்களை நம்ப முடியாது.

'கூலி' திரைப்படத்தின் உண்மையான ஹீரோ லோகேஷ் கனகராஜ்தான். படத்துக்கு வானத்தின் அளவுக்கு எதிர்பார்ப்பு இருக்கு.
அவையெல்லாம் இயற்கையாகவே வந்த எதிர்பார்ப்புகள்தான். நாகர்ஜுனாவுக்கு இப்போது ஸ்கின் கலர் நல்லா இருக்கு. ஆனா, எனக்கு முடிகூடப் போயிடுச்சு.
அவர்கிட்ட எப்படி இதெல்லாம்னு கேட்டால் 'உடற்பயிற்சி'னு சொல்றாரு. 'எத்தனை நாள்தான் நானும் நல்லவனாகவே நடிக்கிறது'னு வெங்கட் பிரபு அஜித்துக்கு ஒரு வசனம் எழுதியிருப்பாரு.
அதே மாதிரிதான் நாகர்ஜுனாவும் இந்தப் படத்துல வில்லன் ரோல்ல நடிச்சிருக்காரு" என்று பேசியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...