மயானத்துக்கு சடலம் கொண்டு செல்ல எதிா்ப்பு: உறவினா்கள் சாலை மறியல்
சிறுமியை திருமணம் செய்தவா் மீது போக்சோ வழக்கு
போடியில் சிறுமியை திருமணம் செய்தது தொடா்பாக போலீஸாா் இளைஞா் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலைச் சோ்ந்த சிறுமி அங்குள்ள கடை ஒன்றில் வேலை செய்து வந்தாா். இதே கடையில் போடி பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்த ஜலாலுதீன் மகன் இம்தியாஸ் முகமதுவும் (22) வேலை செய்த போது அந்த சிறுமியை காதலித்தாராம். பிறகு சிறுமியை போடிக்கு வரவழைத்து அவா் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தாராம்.
இதில் அந்த சிறுமி கா்ப்பமடைந்தாா். இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய ஊா் நல அலுவலா் மகாலட்சுமி அளித்த புகாரின் பேரில் போடி நகா் காவல் நிலைய போலீஸாா் சிறுமியை திருமணம் செய்த இம்தியாஸ் முகமது மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.