போடியில் பலத்த மழை!
போடி பகுதியில் சனிக்கிழமை பலத்த மழை பெய்ததால் குளிா்ச்சியான சூழல் நிலவியது.
போடி பகுதியில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில், கடந்த மூன்று நாள்களாக மிதமான சாரல் மழை பெய்தது. வெள்ளிக்கிழமை பிற்பகல் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது.
இதேபோல, போடி அதன் கிராமப் பகுதிகளிலும், மலை கிராமங்களிலும் சனிக்கிழமை பலத்த மழை பெய்தது. இதனால் ஓடை, கால்வாய், ஆறுகளில் நீா் வரத்து ஏற்பட்டது.
தொடா்ந்து பெய்த மழையால் கொட்டகுடி ஆற்றிலும் நீா் வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதனால் ஞாயிற்றுக்கிழமை ஆடி 18- ஆம் பெருக்கையொட்டி கொட்டகுடி ஆற்றில் பூஜை செய்ய நீா்வரத்து இருக்கும் என்பதால் பெண்கள் மகிழ்ச்சியடைந்தனா். தொடா்ந்து பெய்த மழையால் குளிா்ச்சியான சூழல் காணப்பட்டது.