"ஸ்டாலினுக்குத் தெரியும் நான் மானஸ்தன் என்று" - திமுகவில் இணைவது குறித்து பதிலளி...
வீடே வெறிச்சோடி இருக்கு.. மதன் பாப் மறைவுக்கு செல்லாத நடிகர்கள்!
நடிகர் மதன் பாப்-ன் உடலைக் காண அவருடன் நடித்த நடிகர்கள் வரவில்லை என சிலர் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.
நடிகர் மதன் பாப் தனது தனித்துவமான சிரிப்பால், ரசிகர்களை கவர்ந்தவர். இசையமைப்பாளராகத் திரை வாழ்க்கையைத் தொடங்கிய அவர், பின்னாளில் குணச்சித்திர நடிப்பில் தனி முத்திரைப் பதித்தார். 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள், நகைச்சுவைத் தொடர்கள் என ரசிகர்களிடம் நல்ல பெயரையும் பெற்றிருந்தார்.
சில காலமாக புற்றுநோயுடன் போராடி வந்தவர் நேற்று (ஆக.2) உடல்நலக் குறைவால் சென்னை அடையாறில் உள்ள தனது இல்லத்தில் காலமானார்.
மதன் பாபின் மறைவு திரை ரசிகர்களிடம் பெரிய அதிர்ச்சியைக் கிளப்பியது. பலரும், சிரிக்கப்போவது யாரு? நிகழ்ச்சியின் காணொலி துணுக்குகளைப் பகிர்ந்து இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், மதன் பாப் உடலைக் காண அவருடன் நடித்த பெரிய நடிகர்களும், திரைப் பிரபலங்கள் பலரும் வரவில்லை என அஞ்சலி செலுத்த வந்த சிலர் ஆதங்கம் தெரிவித்து வருகின்றனர். மேலும், அவர் மறைந்ததைவிட அஞ்சலி செலுத்த வராத கூட்டத்தால் வீடே வெறிச்சோடி இருப்பதைக் காணும்போது மனம் வலிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
இறுதியாக, நடிகர் விஜய்காந்த் மகன் சண்முக பாண்டியனின் கொம்பு சீவி படத்தில் மதன் பாப் நடித்தார். மறைவுச் செய்தியைக் கேட்டதும் சண்முக பாண்டியன் நேரில் சென்று தன் அஞ்சலியைச் செலுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: சொந்த வீடு இல்லாதது குற்றமா? 3 பிஎச்கே சொல்ல வருவது என்ன?