செய்திகள் :

காயத்தால் வெளியேறிய மெஸ்ஸி: பெனால்டியில் வென்ற இன்டர் மியாமி!

post image

லீக்ஸ் கோப்பை போட்டியில் இன்டர் மியாமி அணி பெனால்டி வாய்ப்பில் 5-4 என வென்றது.

லீக்ஸ் கோப்பை தொடரில் இன்டர் மியாமி அணியும் நெகாக்சா அணியும் இந்திய நேரப்படி அதிகாலை 4.30 மணிக்கு மோதின.

Inter Miami forward Lionel Messi (10) takes a tumble in a clash with Necaxa defenders Alexis Pena
கீழே விழுந்த மெஸ்ஸி...

இந்தப் போட்டியில் 8-ஆவது நிமிஷத்தில் எதிரணியினர் கீழே தள்ளியதால் மெஸ்ஸிக்கு காயம் ஏற்பட்டு வெளியேறினார்.

இந்தப் போட்டியில் நெகாக்சா 33, 81ஆவது நிமிஷத்தில் கோல் அடித்து முன்னிலை வகிக்க, இன்டர் மியாமி 12, 90+2 ஆவது நிமிஷத்தில் கோல் அடித்து அசத்தியது.

பின்னர், ஆட்டம் பெனால்டிக்கு சென்றது. இதில் இன்டர் மியாமி 5-4 என வென்று அசத்தியது.

இரு அணிகளிலும் தலா ஒரு வீரர் ரெட் கார்டு வாங்கி வெளியேறியதால் 10 பேருடன் விளையாடினார்கள்.

லீக்ஸ் கோப்பை புள்ளிப் பட்டியலில் 5 புள்ளிகளுடன் இன்டர் மியாமி அணி இரண்டாம் இடம் பிடித்துள்ளது.

டாப் 4 அணிகள் நாக் அவுட் சுற்றுக்குத் தகுதிபெறும். இறுதிப் போட்டி ஆக.31ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

நடப்பு சாம்பியனாக (2023) இன்டர் மியாமி அணி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Luis Suárez had the winning penalty kick, and Inter Miami rallied to beat Necaxa in the Leagues Cup after losing Lionel Messi to a hamstring injury in the opening minutes.

நான் கூலியில் நடிக்க ஒரே காரணம் இதுதான்: ஆமிர் கான்

கூலி படத்தில் இணைந்தது குறித்து நடிகர் ஆமிர் கான் பேசியுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள கூலி திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி பாராட்டுகளைப் பெற்று வரு... மேலும் பார்க்க

விருதே வாழ்த்திய தருணம்: ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி!

தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த தமிழ்ப்பட விருது வென்ற பார்க்கிங் படக்குழுவினரை நடிகர் கமல்ஹாசன் அழைத்து வாழ்த்து தெரிவித்தார்.அறிமுக இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் பேஷன் ஸ்டூடியோஸ் த... மேலும் பார்க்க

வீடே வெறிச்சோடி இருக்கு.. மதன் பாப் மறைவுக்கு செல்லாத நடிகர்கள்!

நடிகர் மதன் பாப்-ன் உடலைக் காண அவருடன் நடித்த நடிகர்கள் வரவில்லை என சிலர் ஆதங்கம் தெரிவித்துள்ளனர். நடிகர் மதன் பாப் தனது தனித்துவமான சிரிப்பால், ரசிகர்களை கவர்ந்தவர். இசையமைப்பாளராகத் திரை வாழ்க்கையை... மேலும் பார்க்க

டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் சிவாங்கி!

டாப் குக் டூப் குக்கு என்ற சமையல் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனை பாடகி சிவாங்கி தொகுத்து வழங்கவுள்ளார்.குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகிய செஃப் வெங்கடேஷ் பட், மீடியா மேசன்ஸ் நிறுவனத்துடன் இண... மேலும் பார்க்க

3 தேசிய விருதுகள்! பார்க்கிங் படக்குழுவை வாழ்த்திய கமல் ஹாசன்!

நடிகர் கமல் ஹாசன் தேசிய விருதுகள் வென்ற பார்க்கிங் திரைப்பட குழுவினரை வாழ்த்தினார்.அறிமுக இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் பேஷன் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் நடிகர்கள் ஹரிஷ் கல்யாண், எம்.எஸ்.பா... மேலும் பார்க்க

நிறைவடையும் தங்க மகள்... மகளே என் மருமகளே தொடரின் ஒளிபரப்பு அறிவிப்பு!

நடிகை வர்ஷினி சுரேஷ் பிரதான பாத்திரத்தில் நடிக்கும் மகளே என் மருமகளே தொடரின் ஒளிபரப்பு நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.தெலுங்கு மொழியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் பிரபலமான மகுவா ஓ மகுவா என்ற தொடர், தமிழ... மேலும் பார்க்க