கோவை வந்த தோனிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு
கோவை வந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் தோனியை மக்கள் உற்சாக முழக்கங்களுடன் வரவேற்றனர்.
கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனி கோவையில் தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக விமானம் மூலம் ஞாயிறுக்கிழமை கோவை வந்தடைந்தார்.
காயத்தால் வெளியேறிய மெஸ்ஸி: பெனால்டியில் வென்ற இன்டர் மியாமி!
அப்போது கோவை விமான நிலையத்தில் இருந்த மக்கள் பலரும் தோனியை பார்த்தவுடன் மாஹி, தல தோனி, என்று உற்சாக முழக்கத்துடன் வரவேற்றனர்.
தொடர்ந்து அவரிடம் புகைப்படம் எடுத்துக் கொள்வதற்கு மக்கள் முந்தி அடித்துச் சென்றனர். ஆனால் காவல்துறையினர் தோனிக்கு பாதுகாப்பு வழங்கியதை அடுத்து காரில் புறப்பட்டுச் சென்றார்.