ரெப்கோ வங்கியில் மார்க்கெட்டிங் அசோசியேட் பணிகள்
சென்னையில் உள்ள ரெப்கோ வங்கியில் காலியாக உள்ள மார்க்கெட்டிங் அசோசியேட் பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Marketing Associate
காலியிடங்கள்: 10
வயது வரம்பு: 30.6.2025 தேதியின்படி 25-லிருந்து 35-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.12,000 - 15,000
தகுதி: முறையான கல்வித் திட்டத்தின்கீழ் (ரெகுலர் முறை) பட்டப்படிப்பை முடித்து ஒரு ஆண்டு மார்க்கெட்டிங் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பதாரரின் பணி அனுபவம் மற்றும் வங்கித் துறை சார்ந்த பணித்திறமை அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். இதற்கான் நேர்முகத்தேர்வு குறித்த விபரம் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.
விண்ணப்பிக்கும்முறை: www.repcobank.com இணையதளத்தில் கொடுக்கப்பட் டிருக்கும் விண்ணப்பப் படிவ மாதிரியை ஏ4 அளவு வெள்ளைத் தாளில் தட்டச்சு செய்து, பூர்த்தி செய்து, வலது மூலையில் சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை ஒட்டி, அதனுடன் தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்க்கண்ட அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். அனுப்பும் அஞ்சல் கவரின் மீது விண்ணப்பிக்கும் பணியின் பெயரைக் குறிப்பிடவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The General Manager(Admin), Repco Bank Ltd.,
P.B. No.: 1449, Repco Tower, No.33, North Usman Road, T. Nagar, Chennai - 600 017.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 5.8.2025
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.