உளவுத்துறையில் 3,717 உதவி புலனாய்வு அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
மத்திய அரசின்கீழ் செயல்படும் உளவுத் துறைக்கு சொந்தமான அலுவலகங்களில் காலியாக உள்ள 3,717 உதவி புலனாய்வு அதிகாரி பணியிடங்களுக்கு பட்டதாரி இளைஞர்களிடம் இருந்தும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: ASSISTANT CENTRAL INTELLIGENCE OFFICER GRADE – II (EXECUTIVE)
காலியிடங்கள்: 3,717
சம்பளம்: மாதம் ரூ. 44,900 - 1,42,400 + இதர சலுகைகள்
தகுதி: ஏதாவெதாரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் கணினியில் பணியாற்றுவது குறித்தும் தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 முதல் 27-க்குள் இருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் வயதுவரம்பானது 10.8.2025 தேதியின்படி கணக்கிடப்படும். மத்திய அரசின் விதிமுறைப்படி வயது வரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினர்களுக்கு 3 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் முறையில் நடத்தப்படும் இரண்டு கட்ட எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.
தமிழ்நாட்டில் எழுத்துத் தேர்வு நடைபெறும் இடங்கள்: சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி மற்றும் வேலூர்
எழுத்துத்தேர்வு தொடர்பான விபரங்கள் தகுதியானவர்களுக்கு அவர்களது அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்சி, மாற்றுத்திறனாளி பிரிவினர்கள் மற்றும் பெண்களுக்கு ரூ.550. இதர பிரிவினர்கள் ரூ.650 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.mha.gov.in அல்லது www.ncs.gov.in ஆகிய இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதன் பதிவிறக்கம் செய்து பிரிண்ட் அவுட் கைவசம் வைத்துக் கொள்ளவும். எழுத்துத்தேர்வு, நேர் முகத்தேர்வின்போது அசல் சான்றிதழ்களுடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 10.8.2025
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
உளவுத்துறையில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!