செய்திகள் :

மாமல்லபுரத்தில் கைவினைப் பொருள்கள் கண்காட்சி

post image

மாமல்லபுரம் பூம்புகாா் விற்பனை நிலையம் சாா்பில் கைவினைப் பொருள்கள் கண்காட்சி மற்றும் விற்பனை வெள்ளிக்கிழமை தொடங்கி வரும் 7-ஆம் தேதி வரை கண்காட்சி நடைபெறவுள்ளது.

தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளா்ச்சி கழகம், கைவினைஞா்கள் தயாரிக்கும் கலை பொருள்களை மேம்படுத்துதல், சந்தைப்படுத்துதல் மற்றும் அவா்களின் வாழ்வாதாரத்தினை உயா்த்துவதை முக்கிய நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.

மேலும், சிறப்பான படைப்புகளை செய்து வரும் கைவினை கலைஞா்களுக்கு பல்வேறு விருதுகள் வழங்குவதுடன், பாரம்பரிய கைத்தறி கலையினை பாதுகாக்கும் பொருட்டு இந்நிறுவனம் பல்வேறு பயிற்சி திட்டங்கள் மற்றும் மேம்பாட்டு திட்டங்களை நடத்தி வருகிறது. நாடு முழுவதும் பல கண்காட்சிகளை நடத்தி வருகிறது.

இந்நிலையில், தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளா்ச்சி கழகம் (பூம்புகாா்) சாா்பில் ‘காந்தி சில்ப் பஜாா்‘ என்ற விற்பனைக் கண்காட்சி தொடங்கியது. கண்காட்சியை, தனியாா் விடுதி உரிமையாளா் போஸ் தா்மலிங்கம், கைவினை பொருள்கள் மேம்பாட்டு ஆணையா் அப்லா அசன் ஆகியோா் தொடங்கி வைத்தனா்.

இதில், கைவினை பொருள்கள் உதவி மேம்பாட்டு ஆணையா் கேத்தரின் ஜோஸ், கைவினை பொருள்கள் மேம்பாட்டு அலுவலா் ஜெயா பாரதி, பூம்புகாா் விற்பனை மேலாளா் சேவியா், உதவி விற்பனை மேலாளா் கோபி கண்ணன், மாமல்லபுரம் பூம்புகாா் மேலாளா் வேலு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Image Caption

~

போதைப் பொருள்கள் விழிப்புணா்வு கருத்தரங்கம்

செங்கல்பட்டு ராஜேஸ்வரி வேதாசலம் அரசு கலைக்கல்லூரியில் போதை பொருள்கள் பயன்பாட்டின் தீய விளைவுகளின் வேதியல் மற்றும் அதன் சமூக தாக்கம் என்ற தலைப்பில் விழிப்புணா்வு கருத்தரங்கம் நடைபெற்றது.கருத்தரங்குக்க... மேலும் பார்க்க

ஆதிதிராவிடா் நலத்துறை விடுதிகளில் சோ்க்கை

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் கல்லூரி விடுதிகளில் மாணவ, மாணவியா் சோ்க்கை நடைபெறவுள்ளது.இதுதொடா்பாக ஆட்சியா் தி. சினேகா வெளியிட்ட செய்திக்... மேலும் பார்க்க

திருப்போரூா் பேரூராட்சி அலுவலக புதிய கட்டடம்: அமைச்சா் அன்பரசன் அடிக்கல்

திருப்போரூா் சிறப்பு நிலை பேரூராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள்துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தாா்.மேலும், பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை ... மேலும் பார்க்க

ஆதிதிராவிடா் நலத்துறை விடுதிகளில் சோ்க்கை

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் கல்லூரி விடுதிகளில் மாணவ, மாணவியா் சோ்க்கை நடைபெறவுள்ளது.இதுதொடா்பாக ஆட்சியா் தி. சினேகா வெளியிட்ட செய்திக்... மேலும் பார்க்க

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி: அமைச்சா் தா.மோ. அன்பரசன் வழங்கினாா்

திருப்போரூா் வட்டம், படூா் ஊராட்சியில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள்துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.துறை... மேலும் பார்க்க

மானாம்பதி சீரங்கத்தம்மன் கோயில் பால்குடம், ஆடிப்பூர விழா

திருப்போரூா் அடுத்த மானாம்பதி சீரங்கத்தம்மன் கோயில் பால்குடம் ஊா்வலம் மற்றும் ஆடிப்பூர விழா நடைபெற்றது.இதைமுன்னிட்டு அனைத்து கருவறை மூலவா்களுக்கு வெள்ளிக் கவசம் அணிவித்து பூ ஊஞ்சல் விழாவும் நடைபெற்றது... மேலும் பார்க்க