71st National Film Awards: "மக்களை மகிழ்வூட்டவும், விழிப்பூட்டவும் வாழ்த்துகிறேன...
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்: மூவர் காயம்
வேதாரண்யம்: கோடியக்கரை அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த வேதாரண்யம் பகுதி மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் வெள்ளிக்கிழமை இரவு தாக்குதல் நடத்தியுள்ளனர்.
மேலும், மீனவர்களின் படகு இயந்திரங்களை சேதப்படுத்தி அவர்களை விரட்டி அடித்துள்ளனர். பாதிக்கப்பட்ட மீனவர்களில் மூவர் ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த வெள்ளப்பள்ளம் மீனவ கிராமத்தில் இருந்து 3 கண்ணாடியிழைப் படகுகளில் 14 மீனவர்கள் வெள்ளிக்கிழமை கடலுக்குள் சென்றனர்.
கோடியக்கரைக்கு தென்கிழக்கே இரவு படகை நிறுத்தி மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு இரண்டு இலங்கைப் படகுகளில் வந்த 4 பேர், அவர்களது படகை கொண்டு மீனவர்கள் இருந்த படகை மோதி, இயந்திரங்களை சேதப்படுத்தி தாக்கியுள்ளனர்.
இதில், காயமடைந்த மீனவர்கள் விஸ்வநாதன், மூர்த்தி, செல்வராசு ஆகியோர் நாகை ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.