இளைஞன் - வளர்ந்த மனிதன்... பத்தாண்டுக்குப் பிறகு பிரீமியர் லீக்கிலிருந்து விலகும...
ஜோ ரூட்டை வம்பிழுத்தது ஏன்? பிரசித் கிருஷ்ணா விளக்கம்!
இந்திய வேகப் பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணா ஜோ ரூட்டை வம்பிழுத்தது தங்களது திட்டங்களுல் ஒன்றாக இருந்தது எனக் கூறியுள்ளார்.
ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபியில் 2-1 என இங்கிலாந்து முன்னிலை வகிக்கிறது. கடைசி டெஸ்ட்டில் வென்று தொடரை சமம்செய்ய இந்தியா முனைப்புடன் இருக்கிறது.
முதல் இன்னிங்ஸில் இந்தியா 224க்கு ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணி 247க்கு ஆட்டமிழந்தது. தற்போது, இந்திய அணி 2-ஆவது இன்னிங்ஸை விளையாடி வருகிறது.
இங்கிலாந்து அணி முதல் இன்னிக்ஸில் நல்ல நிலையில் இருந்தும் சொதப்பியது.
இந்தப் போட்டியில் ஜோ ரூட்டிடம் பிரசித் கிருஷ்ணா 22ஆவது ஓவரில் வம்பிழுத்துக் கொண்டே இருந்ததால் நடுவர் தலையிடும்படி ஆனது. பின்னர் ரூட் விரைவில் ஆட்டமிழந்தார்.
இது குறித்து பிரசித் கிருஷ்ணா கூறியதாவது:
இது சிறிய விஷயம்தான். எங்களுக்கு உள்ளாக இருக்கும் போட்டி மனப்பான்மை வெளியே வந்தது அவ்வளவுதான். களத்துக்கு வெளியே நாங்கள் நல்ல நண்பர்கள். இந்த மோதலை நாங்கள் இருவருமே மகிழ்ச்சியாக எதிர்கொண்டோம்.
ஜோ ரூட்டை வம்பிழுப்பது எங்களது திட்டத்திலே இருந்தது. ஆனால், நான் பேசியதற்கு அவர் அப்படி எதிர்வினை ஆற்றுவாரென நினைக்கவில்லை.
எனக்கு அவரை எப்போதும் பிடிக்கும். அவர் கிரிக்கெட்டின் ஒரு லெஜெண்ட் என்றார்.
Joe Root and Prasidh Krishna interaction #ENGvsINDpic.twitter.com/5zOGWj84QQ
— ascii13 (@zeracast) August 1, 2025