செய்திகள் :

பாலியல் குற்றவாளி பிரஜ்வல் ரேவண்ணாவுக்குச் சாகும் வரை ஆயுள் தண்டனை; சிறப்பு நீதிமன்றம் அதிரடி

post image

பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்குள்ளான முன்னாள் எம்.பி பிரஜ்வல் ரேவண்ணா நேற்று நீதிமன்றத்தால் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில், இன்று அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.

முன்னதாக, கடந்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் கர்நாடகா ஹசன் தொகுதியில் பிரஜ்வல் ரேவண்ணா (2019 - 24 மக்களவை எம்.பி) போட்டியிட்ட சமயத்தில், பல்வேறு பெண்களுக்கு அவர் பாலியல் துன்புறுத்தல் அளித்தது தொடர்பான 2,500-க்கும் மேற்பட்ட வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பிரஜ்வல் ரேவண்ணா (வலது ஓரம்)
பிரஜ்வல் ரேவண்ணா (வலது ஓரம்)

உடனடியாக வெளிநாட்டுக்குத் தப்பியோடிய பிரஜ்வல், முன்னாள் பிரதமரான தனது தாத்தா தேவகவுடா கூறிய பின்னர் மே 31-ம் தேதி நாடு திரும்பிய பிறகு போலீஸாரால் கைதுசெய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்.

சுமார் 14 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அதேவேளையில், இன்ஸ்பெக்டர் ஷோபா தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT), விசாரணையில் 123 ஆதாரங்களைச் சேகரித்து, கிட்டத்தட்ட 2,000 பக்கங்களைக் கொண்ட பெரிய குற்றப்பத்திரிகையைச் சமர்ப்பித்தது.

இதன் மீது கடந்த டிசம்பர் இறுதியில் தொடங்கப்பட்ட நீதிமன்ற விசாரணையில் கடந்த ஏழு மாதங்களில் 23 சாட்சிகளை நீதிமன்றம் விசாரித்தது.

பிரஜ்வல் ரேவண்ணா

இத்தகைய சூழலில், விசாரணையின் முடிவில் மக்கள் பிரதிநிதிகளுக்கான சிறப்பு நீதிமன்றம், பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என நேற்று தீர்ப்பளித்து, தண்டனை அறிவிப்பை அடுத்த நாளுக்கு (ஆகஸ்ட் 2) ஒத்திவைத்தது.

இந்த நிலையில், பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டிருக்கிறது.

மேலும், கே.ஆர். நகரைச் சேர்ந்த வீட்டுப் பணிப்பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்து, அதை வீடியோவாகப் பதிவு செய்த குற்றத்தில், பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ரூ.11 லட்சம் அபராதம் விதித்து, அந்தத் தொகை பாதிக்கப்பட்டவருக்குச் செல்ல வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

Rahul Gandhi: "நான் ராஜா அல்ல; ராஜா என்ற கோட்பாட்டுக்கு எதிரானவன்" - ராகுல் காந்தி ஓபன் டாக்

2019 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்த பிறகு தலைவர் பதவியிலிருந்து ராகுல் காந்தி விலகினார்.அதன்பின்னர், காங்கிரஸ் எம்.பி-யாகச் செயல்பட்டு வந்த ராகுல் காந்தி தற்போது மக்களவை எதிர்க்கட... மேலும் பார்க்க

"இறந்தவர்களை நிம்மதியாக இருக்க விடுங்கள்" - ராகுல் காந்தியின் பேச்சுக்கு அருண் ஜெட்லி மகன் பதில்

நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மறைந்த முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி குறித்துப் பேசிய கருத்துக்களுக்கு அவரது மகன் கடுமையாக எதிர்வினையாற்றியிருக்கிறார்.விவசாயிகள் சட்டம் அறிம... மேலும் பார்க்க

SIR: "என் பெயரில்லை; நான் எப்படிப் போட்டியிடுவது" -தேஜஸ்வி கேள்விக்கு தேர்தல் ஆணையத்தின் பதில் என்ன?

பீகார் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் சூழலில், எதிர்க்கட்சிகளின் பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில், ஒரே மாதத்தில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்தை (SIR) தே... மேலும் பார்க்க

"ஓ.பி.எஸ் வந்துகொண்டிருக்கிறார்..!" - கூட்டணி குறித்து திமுக அமைச்சர் பேச்சு!

திருச்சியில் 'நலன் காக்கும் ஸ்டாலின்' முகாமைப் பார்வையிட்ட நகராட்சி நிர்வாகம் (ம) குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திமுக கூட்டணிக்கு வருவதாகப் பேசியிரு... மேலும் பார்க்க

"அது நடக்கவில்லையென்றால் மோடி இன்று பிரதமரே அல்ல" - ஆதாரங்களை வெளியிடுவதாக ராகுல் உறுதி

மக்களவைத் தேர்தல் கடந்த ஆண்டு முடிந்த பிறகு நடத்தப்பட்ட மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடந்திருப்பதாகத் தேர்தல் ஆணையத்தின் மீது ராகுல் காந்தி தொடர்ச்சியாகக் குற்றச்சாட்... மேலும் பார்க்க

"எனது வீட்டில் ஒட்டுக் கேட்பு கருவியை வைத்தது அன்புமணி தான்" - ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு

ராமதாஸ் - அன்புமணி மோதல் விவகாரம் முடிவுறாத கதையாகநீண்டுகொண்டிருக்கிறது. இருவரும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்த வண்ணமிருக்கிறார்கள்.கடந்த மாதம், "என் வீட்டிலேயே, நான் உட்கார்ந்திருக்கும் இடத்தி... மேலும் பார்க்க