ஒடிஸாவில் தீ வைக்கப்பட்ட மாணவி: 2 வாரமாக உயிர் பிழைக்க போராடிய நிலையில் சிகிச்சை...
Coolie : "அப்பாவுக்கு விக்ரம் படத்தைக் கொடுத்ததற்கு நன்றி லோகேஷ்!" - விழாவில் ஷ்ருதி ஹாசன்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் 'கூலி' திரைப்படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் பிரமாண்டமான முறையில் நடைபெற்று வருகிறது.
ஆமீர் கான், நாகர்ஜூனா, செளபின் சாஹிர் என படத்தின் முக்கிய நடிகர்கள் அனைவரும் இந்த நிகழ்வுக்கு வந்திருக்கிறார்கள்.

அனிருத் இசையில் உருவாகியிருக்கும் 'கூலி' திரைப்படத்தின் அத்தனை பாடல்களும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல விமர்சனங்களையும் பெற்று வருகிறது. படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியிருக்கிறது.
படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகை ஷ்ருதி ஹாசன் பேசுகையில், " இந்த நாள் என் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான நாள். ரஜினி சாருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த திரைப்படத்தில் நடித்திருக்கும் செளபின் சாஹிர் மிகவும் திறமை வாய்ந்தவர். முக்கியமாக, உபேந்திரா சாரின் ஸ்கிரீன் ப்ரசென்ஸ் அதிரடியானதாக இருக்கும். இத்திரைப்படத்தில் சத்யராஜ் சாரின் மகளாக நடித்ததில் மிக்க மகிழ்ச்சி.
எனக்கு 'கூலி' திரைப்படத்தில் ப்ரீத்தி கதாபாத்திரத்தைக் கொடுத்ததற்கு நன்றி. அதுபோல, என்னுடைய அப்பாவுக்கு 'விக்ரம் திரைப்படத்தை கொடுத்ததற்கும் நன்றி.

அப்படத்திலிருந்துதான் உங்களுடைய பெரிய ரசிகை ஆகிவிட்டேன். லோகேஷ் கனகராஜ் அமைதியாக செயல்படக்கூடிய ஒரு இயக்குநர். அதுமட்டுமல்ல, நம்மோட ஒன்றிணைந்து செயல்படக்கூடியவர்.
ஆமீர் கான் உங்களுடன் இணைந்து பணியாற்றியதை பெருமையாக கருதுகிறேன். அனிருத்தை நினைத்து பெருமையாக இருக்கிறது. அவருடைய இளமை காலத்திலிருந்து அவரைப் பார்த்து வருகிறேன்.
உங்களுடைய ஸ்பெஷலான பின்னணி இசை படத்தில் அடுத்த லெவலுக்குக் கொண்டு செல்கிறது.'' எனக் கூறியிருக்கிறார்.