கடைசி டெஸ்ட்: இங்கிலாந்துக்கு 374 ரன்கள் இலக்கு - இந்தியா அபார முன்னிலை!
நடிகர் மதன் பாப் காலமானார்
உடல்நலக் குறைவால் நடிகர் மதன் பாப் சென்னை அடையாறில் உள்ள தனது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 71.
கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களிலும், காமெடி நடிகராகவும் நடித்து பிரபலம் அடைந்தவர். வெள்ளித்திரையில் மட்டுமல்லாமல் சின்னத்திரை நிகழ்ச்சியின் நடுவராகவும் இருந்திருக்கிறார்.
நடிகர் மதன் பாபு தனது தனித்துவமான சிரிப்பால், ரசிகர்களை கவர்ந்தவர். இசையமைப்பாளராக திரைவாழ்க்கையைத் தொடங்கிய அவர், பின்னாளில் குணச்சித்திர நடிப்பில் தனி முத்திரைப் பதித்தார். மதன் பாப்பின் இயற்பெயர் கிருஷ்ணமூர்த்தி.
பத்த வச்சுட்டியே பரட்டை... கூலி டிரைலர் இறுதியில் காக்கா சப்தம்!
இவருக்கு மனைவி சுசிலா, மகள் ஜனனி, மகன் அர்ஷித் ஆகியோர் உள்ளனர். மதன் பாப்பின் உடல் சென்னை அடையாறில் உள்ள அவரது இல்லத்தில் குடும்பத்தினரின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது மறைவு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த சில மாதங்களாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நிலையில் சனிக்கிழமை மாலை மதன் பாப் காலமாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.