'நயினாருக்கு எதிராக ஓபிஎஸ்' டு Coolie இசை வெளியீட்டு விழா; 02.08.2025 முக்கிய செ...
முதல்வர் ஸ்டாலினுடன் கமல்ஹாசன் சந்திப்பு
சென்னை ஆழ்வார்பேட்டையில் முதல்வர் ஸ்டாலினை கமல்ஹாசன் சனிக்கிழமை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் உடல்நலக் குறைவு காரணமாக ஒரு வாரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார்.
இதனைத் தொடர்ந்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பிய நிலையில், மூன்று நாள்கள் மருத்துவரின் அறிவுறுத்தல்படி ஓய்வில் இருந்தார்.
இந்த நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வர் ஸ்டாலின் வீட்டுக்கு சென்று அவரைச் சந்தித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உடல்நலம் விசாரித்தார்.
இந்த சந்திப்பின்போது துணை முதல்வர் உதயநிதி உடல் இருந்தார்.
தலைவா... கூலி டிரைலரால் உற்சாகமடைந்த தனுஷ்!
இதுகுறித்து கமல்ஹாசன் தனது எக்ஸ் தளத்தில், மக்களின் முதலமைச்சர், அன்பு நண்பர் ஸ்டாலினைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. அவர் புத்துணர்ச்சியோடு மக்கள் பணிக்குத் திரும்பியதில் பெருமகிழ்ச்சி.
ஆனந்தமான இந்த உரையாடலின் போது துணை முதல்வர், தம்பி உதயநிதி உடனிருந்தது கூடுதல் மகிழ்ச்சி. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கெனவே முதல்வர் ஸ்டாலினிடம் பிரேம லதா, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் நேரில் நலம் விசாரித்த நிலையில் தற்போது கமல்ஹாசனும் நலம் விசாரித்துள்ளார்.
Kamal Haasan met CM Stalin in person in Alwarpet, Chennai on Saturday and inquired about his well-being.