Coolie Trailer: 'தலைவன் இறங்கி சரிதம் எழுதவே!' - வெளியான 'கூலி' திரைப்பட டிரெய்லர்!
லோகேஷ் கனராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் 'கூலி' திரைப்படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் பிரமாண்டமான முறையில் நடைபெற்று வருகிறது. ஆமீர் கான், நாகர்ஜூனா, செளபின் சாஹிர் என படத்தின் முக்கிய நடிகர்கள் அனைவரும் இந்த நிகழ்வுக்கு வந்திருக்கிறார்கள்.

அனிருத் இசையில் உருவாகியிருக்கும் 'கூலி' திரைப்படத்தின் அத்தனை பாடல்களும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல விமர்சனங்களையும் பெற்று வருகிறது. படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியிருக்கிறது. அதில் இடம்பெற்றிருக்கும் முக்கியமான சில ஹைலைட்ஸை மட்டும் பார்ப்போமா....
துறைமுகத்தில் பணிகளைக் கவனிக்கும் கூலி தொழிலாளியாக இருக்கும் தேவா (ரஜினி) பிரச்னைகளுக்கு தீர்வுகளை தேடிக் கொடுப்பவராக இந்த டிரெய்லரில் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.

கன்னட நடிகர் உபேந்திராவும் கூலி தொழிலாளர்களில் ஒருவராக இருக்கிறார். படத்தில் நாகர்ஜூனா, செளபின் சாஹிர், ஆமீர் கான் என அனைவருமே பெரிய நெட்வொர்க் கும்பல்களை கட்டி ஆளும் வில்லன்களாகவே வருகிறார்கள். ரஜினியின் நண்பராக சத்யராஜ் வருகிறார்.