Coolie: "1421 - இது என் தந்தைக்குச் செய்யும் டிரிப்யூட்" - 'கூலி' சீக்ரெட்ஸ் சொல...
நகையை பறித்து தப்பிச்சென்றபோது கார் மீது இருசக்கர வாகனம் மோதல்: சிறுவன் பலி, 8 பேர் காயம்
பஞ்சாபில் நகையை பறித்து தப்பிச்சென்ற கொள்ளையர்களின் இருசக்கர வாகனம், கார் மீது மோதியதில் 12 வயது சிறுவன் பலியானான்.
பஞ்சாப் மாநிலம், பட்டி சுரா சிங் கிராமத்தைச் அமன்தீப் கௌர் மற்றும் அவரது கணவர் ரஞ்சித் சிங் ஆகியோர் வெள்ளிக்கிழமை இரவு வீடு திரும்பிக்கொண்டிருந்தனர்.
மோரன்வாலி கிராமத்திற்கு அருகே இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் அவர்களை வழிமறித்தனர்.
பின்னர் அவர்கள் கௌரின் காதணிகளைக் கொள்ளையடித்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். கர்ஷங்கர் அருகே வந்துகொண்டிருந்தபோது அவர்களின் இருசக்கர வாகனம், எதிர்பாராத விதமாக கார் மீது மோதியது.
இதில் கார் கவிழ்ந்தது. இந்த விபத்தில் சிக்கி 12 வயது சிறுவன் பலியானான்.
அதிரப்பள்ளி சாலையில் காரை தாக்கிய ஒற்றை காட்டுயானை: சுற்றுலா பயணிகள் பீதி
மேலும் காரில் இருந்த ஐந்து பேரும், மூன்று கொள்ளையர்களும் காயமடைந்தனர் என்று போலீஸார் சனிக்கிழமை தெரிவித்தனர். அவர்கள் கர்ஷங்கரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
பலத்த காயமடைந்த இருவர் ஹோஷியார்பூரில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டனர் என்று அவர்கள் மேலும் கூறினர்.