செய்திகள் :

காலா பாணி முதல் டிராகுலா வரை: Vikatan Playயின் ஜூலை மாத Top 5 Audio Books

post image

தொழில்நுட்ப வளர்ச்சி அனைத்தையும் சாத்தியமாக்கி உள்ள இந்தக் காலகட்டத்தில், சர்வதேச அளவில் ஆடியோ புக்ஸ் கேட்கும் பழக்கம் வளர்ந்து வருகிறது. காலை நடைப்பயிற்சி தொடங்கி அலுவலுக்காகப் பயணம் செய்யும் நேரம் வரை அனைத்தையும் பயனுள்ளதாக மாற்றி விடுகிறது இந்த ஆடியோ புத்தகங்கள். விகடனின் ஆடியோ புத்தகங்களை லட்சக்கணக்கானவர்கள் கேட்டு வருகிறார்கள்.

அப்படி Vikatan APPல் உள்ள Vikatan Playல் ஜூலை மாதம் அதிகம் கேட்கப்பட்ட ஐந்து புத்தகங்களை உங்களுக்காகப் பட்டியலிட்டு இருக்கிறோம்.

காலா பாணி
காலா பாணி

காலா பாணி:

டாக்டர் ராஜேந்திரன் ஐஏஎஸ் என்பரால் எழுதப்பட்ட காலா பாணி நாவல் ஒரு வரலாற்றுப் புதினம். 1801-ல் நடைபெற்ற போருக்குப் பின் வீரம் நிறைந்த அதன் ரத்த சரித்திரத்தின் துவக்கப் புள்ளியாய் இருந்த புலித்தேவன், வீரபாண்டிய கட்ட பொம்மு, ஊமைத் துரை, மருது பாண்டியர்களைத் தொடர்ந்து சிவகங்கை அரசர் வேங்கை பெரிய உடையணத் தேவனும் தன் உயிரைத் துறந்தார்.

ஆங்கில அரசு தங்கள் ஏகாதிபத்தியத்தை எதிர்பவர்களை எச்சரிப்பதற்காகப் பெரிய உடையணத் தேவனையும் போராளிகள் 72 பேரையும் பினாங்கிற்கு ‘காலா பாணி’ என்றழைக்கப்பட்ட நாடு கடத்தலை ஆயுதமாக்கியது. அதன் உண்மை நிகழ்விட வர்ணனைகளோடு வரலாற்றுச் சித்திரத்தை நமக்குக் கொடுக்கும் இந்த நாவலுக்கு 2022 ஆம் சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டது இன்னும் கூடுதல் சிறப்பு.

இந்த மாதம் வாசகப்பரப்பால் அதிகம் கேட்கப்பட்ட Audio Bookல் முதலிடம் பிடிக்கிறது அகநி பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட காலா பாணி.

காலா பாணி நூலை விகடன் பிளேயில் கேட்க, : காலா பாணி - https://tinyurl.com/Kaala-Pani-IPS

திரைத்தொண்டர் பஞ்சு அருணாச்சலம்
திரைத்தொண்டர் பஞ்சு அருணாச்சலம்

திரைத்தொண்டர் பஞ்சு அருணாச்சலம்:

தமிழ் திரையுலகில், ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகள் இயக்குநராக, தயாரிப்பாளராக, கதாசிரியராக சினிமாவிற்காக தன்னை ஒப்புக்கொடுத்த பஞ்சு அருணாச்சலம் தன்னுடைய திரைப்பயணத்தில் சந்தித்த வெற்றி தோல்விகளை ஆனந்த விகடனில் தொடராக எழுதினார். அவ்வாறு தமிழ் திரையுலகில் திரைத்தொண்டராக வாழ்ந்த பஞ்சு அருணாச்சலத்தின் சுயசரிதையே இந்த மாதம் அதிகம் கேட்கப்பட்ட Audio Bookல் இரண்டாம் இடத்தைப் பிடிக்கிறது.

திரைத் தொண்டர் பஞ்சு அருணாச்சலம் - https://tinyurl.com/thirai-thondar-Vikatan-play

சிந்தி செல்வந்தன் ஆகு
சிந்தி செல்வந்தன் ஆகு

சிந்தி செல்வந்தன் ஆகு:

நெப்போலியன் ஹில்லால் எழுதப்பட்ட இந்த நூல் நூற்றுக்கணக்கான தொழில் அதிபர்களின் வெற்றிக்கு வித்திட்டுள்ளது. எந்தவொரு துறையாக உங்கள் கனவுக்கு வடிவம் கொடுத்து வெற்றிபெறத் தூண்டும் இந்த நூல் உலகின் முக்கியமான நூலாகக் கருதப்படுகிறது. இந்த மாதம் அதிகம் கேட்கப்பட்ட Audio Bookல் மூன்றாம் இடத்தைப் பிடித்த இந்தப் புத்தகத்தோடு உங்கள் வெற்றியின் துணைவனாக நீங்களும் பயணப்படுங்கள்.

இந்த ஆடியோ புத்தகத்தைக் கேட்கக் கீழே கிளிக் செய்யுங்கள். சிந்தி செல்வந்தன் ஆகு-https://tinyurl.com/think-Grow-rich-vikatan-play

தாமிர மர மாளிகை :

தாமிர மர மாளிகை:

ஆர்தர் கோனல் டாயில் எழுதிய ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகளில் ஒன்றான தாமிரமர மாளிகை அட்டகாசமான துப்பறியும் நாவல். அதிக வாசகப்பரப்பைக் கொண்ட இந்தத் திகில் நாவல் விகடன் பிளேயில் அதிகம் கேட்கப்பட்ட ஆடியோ புத்தகத்தில் நான்காம் இடத்தைப் பிடிக்கிறது.

தாமிர மர மாளிகை ஷெர்லாக் ஹோம்ஸ் - ஷெர்லாக் ஹோம்ஸ் சீரிஸ் - https://tinyurl.com/Thamira-Mara-Maligai

டிராகுலா :

டிராகுலா :

ஹாரர் நாவல்களில் மிக முக்கியமான நூலாகக் கருதப்படும் இந்த டிராகுலா புத்தகமே ஹாரர் நாவல்களின் பிதாமகனாக திகழ்கிறது. நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு திரைப்படமாகவும் வெளிவந்த இந்த டிராகுலா கதையே இந்த மாதம் அதிகம் கேட்கப்பட்ட Audio Bookல் ஐந்தாம் இடத்தைப்பிடிக்கிறது.

நீங்களும் மறக்காம இந்தப் புத்தகத்தை ஆடியோ வடிவில் கேட்க,

டிராகுலா - பிராம் ஸ்டோகர் - https://tinyurl.com/Draculla-Vikatan-Play

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா மீது காதல் கொண்டவர்களின் காதல் குபிட் ஆனந்த விகடன்! | #நானும்விகடனும்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

வாழ்வில் வெற்றியடைய செய்த திண்ணைப் பள்ளி! - 60ஸ் நாட்களை பகிரும் முதியவர்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

பட்டாம்பூச்சியும் ஆப்பிளும் - ராபர்ட் ஃப்ராஸ்ட்; கடல்தாண்டிய சொற்கள் | பகுதி 25

ஒட்டு மொத்த உணர்வினை அடிப்படையாகக் கொண்டு மானுடத்துக்காக இயங்கும் கலைகள் ஒவ்வொன்றும் தன்னளவில் அழகியலை வெளிப்படுத்தினாலும் சமூகத்திற்காகப் படைக்கப்படும் கலை இலக்கியங்கள் அதன் உணர்வுகளை வெளிப்படுத்திக்... மேலும் பார்க்க

என் மனம் கவர்ந்த அறம் காக்கும் தெய்வம் பறம்பு தலைவன் பாரி | #என்னுள்வேள்பாரி

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

இதயத்தில் மலர்ந்த காதல்! - ஒரு மணமகனின் கவிதை போன்ற நினைவலைகள் | #ஆஹாகல்யாணம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க