வாழ்வில் வெற்றியடைய செய்த திண்ணைப் பள்ளி! - 60ஸ் நாட்களை பகிரும் முதியவர்
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
'பருவத்தே பயிர் செய்' என்பது தமிழில் நிலவும் ஒரு பழமொழி. சிறு வயதில் நான் படித்தது திண்ணைப் பள்ளிக்கூடத்தில்தான். ஆண்,பெண் இரு பாலாருக்கும் ஒரே பள்ளி; தரையில்தான் அமரவேண்டும். மாணவ, மாணவிகள் சுமார் 10 பேர் இருந்தார்கள். பாடம் நடத்த ஒரு ஆசிரியர் மட்டுமே; தலைமை ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்ற அவர், அடிக்கடி ஒரு வழக்கு சம்மந்தமாக கோர்ட்டுக்குப் போய்விடுவார்; அவருக்கு வயது சுமார் 65 இருக்கலாம்.
அவரே எங்கள் அனைவரையும், சிந்தாதிரிப்பேட்டை பிரைமரி பள்ளியில் சேர்த்துவிட்டார். நான் 3-ம் வகுப்பில் சேர்க்கப்பட்டேன். 5-ம் வகுப்பு வரை அங்கே படித்தேன். பின்னர், சிந்தாதிரிப்பேட்டை உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து படித்தேன்.

அந்த காலத்தில், 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு முன்னர், பள்ளியில் ஒரு தேர்வு வைப்பார்கள். அதில் பாஸ் செய்தால்தான், பொதுத்தேர்வுக்கு அனுமதிக்கப் படுவார்கள்.
அனைவரும் பாஸ் செய்ய வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில், அப்போதைய தலைமை ஆசிரியர் பத்மநாபன் அவர்கள், மாணவர்களின் வீடுகளுக்கே சென்று, பெற்றோர்களிடம் பேசி, மாணவர்கள் நன்கு படிக்க வழிவகை செய்தார்.
1963-ல் படிப்பை முடித்த நான், 1966-ல் மத்திய அரசு பணியில் சேர்ந்து, 40 வருடங்கள் பணியாற்றினேன். இப்போது ஓய்வில் இருக்கிறேன். தற்சமயம் என் வயது 80.
-சி.பி.ராஜு

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!