Rahul Gandhi: "நான் ராஜா அல்ல; ராஜா என்ற கோட்பாட்டுக்கு எதிரானவன்" - ராகுல் காந்தி ஓபன் டாக்
2019 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்த பிறகு தலைவர் பதவியிலிருந்து ராகுல் காந்தி விலகினார்.
அதன்பின்னர், காங்கிரஸ் எம்.பி-யாகச் செயல்பட்டு வந்த ராகுல் காந்தி தற்போது மக்களவை எதிர்க்கட்சித் தலைவராகச் செயல்பட்டு வருகிறார்.
அதேவேளையில், மோடியின் வெளிநாட்டுப் பயணங்கள் உள்ளிட்ட செயல்பாடுகள் குறித்து விமர்சிக்கும் ராகுல் காந்தி, அவர் ராஜா போலச் செயல்படுவதாகவும், மக்களின் குரலைக் கேட்பதில்லை எனவும் குற்றஞ்சாட்டி வருகிறார்.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் சட்ட மாநாடு கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது.
இதில், காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, கர்நாடக முதல்வர் சித்தராமையா, தெலங்கானா முதல்வர் ரேவந் ரெட்டி, கேரளா எம்.பி பிரியங்கா காந்தி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில், ராகுல் காந்தி உரையாற்றத் தொடங்கியபோது, 'இந்த நாட்டின் ராஜா எப்படி இருக்க வேண்டும்? ராகுல் காந்தி மாதிரி இருக்க வேண்டும்' என்று கோஷங்கள் எழுந்தது.
அப்போது அந்தக் கூற்றை உடனடியாக மறுத்த ராகுல் காந்தி, "இல்லை... இல்லை... நான் ஒருபோதும் ராஜா இல்லை. ராஜாவாக வேண்டும் என்ற ஆசையும் இல்லை. ராஜா என்ற கோட்பாட்டுக்கு எதிரானவன் நான்" என்று கூறினார்.
मैं राजा नहीं हूं और मैं राजा बनना भी नहीं चाहता।
— Congress (@INCIndia) August 2, 2025
मैं राजा के Concept के खिलाफ हूं।
: नेता विपक्ष श्री @RahulGandhipic.twitter.com/LiJEovd96a
அதன்பின்னர் தொடர்ந்து உரையாற்றிய ராகுல் காந்தி, மக்களவைத் தேர்தலில் மோசடி நடந்ததால்தான் மோடி தற்போது பிரதமராக இருப்பதாகவும், மோசடி நடந்ததற்கான ஆதாரங்களை அடுத்த சில நாள்களில் வெளியிடுவதாகவும் கூறினார்.