செய்திகள் :

"எனது வீட்டில் ஒட்டுக் கேட்பு கருவியை வைத்தது அன்புமணி தான்" - ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு

post image

ராமதாஸ் - அன்புமணி மோதல் விவகாரம் முடிவுறாத கதையாக நீண்டுகொண்டிருக்கிறது. இருவரும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்த வண்ணமிருக்கிறார்கள்.

கடந்த மாதம், "என் வீட்டிலேயே, நான் உட்கார்ந்திருக்கும் இடத்திலேயே ஒட்டுக் கேட்கும் கருவியை வைத்துள்ளனர். நேற்றைக்கு முன் தினம்தான் அதைக் கண்டுபிடித்தோம். அது லண்டனில் இருந்து வந்தது என்று கூறுகிறார்கள். அது அதை யார், எதற்காக வைத்தார்கள் என்பதை ஆராய்ந்து வருகிறோம்" என்று பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார் பாமக நிறுவனர் ராமதாஸ்.

ராமதாஸ், அன்புமணி

தற்போது இந்த விவகாரம் குறித்து சென்னை ஆழ்வார்பேட்டையில் பேட்டியளித்திருக்கும் ராமதாஸ், "எனது தைலாபுர வீட்டில் ஒட்டுக் கேட்பு கருவியை வைத்தது என் மகன் அன்புமணிதான். உலகிலேயே தந்தையை வேவு பார்த்த மகன் அன்புமணிதான். ஒட்டுக் கேட்புக் கருவியை காவல்துறையிடம் ஒப்படைத்து புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. விழுப்புரம் காவல்துறை, சைபர் குற்றப்பிரிவு அனைத்திலும் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. தனிப்பட்ட முறையில் நானும் சிறப்புகுழு அமைத்து நடவடிக்கை எடுக்கவிருக்கிறேன். இந்த விவகாரத்தில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.

பொதுவாக ஒரு பொதுக்குழு கூட்ட வேண்டும் என்றால் 15 நாள்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டு, கட்சிதலைமையிடம் அனுமதி பெற்று நடத்த வேண்டும். அன்புமணி நடத்தும் பொதுக்குழு, நடைபயணம் அனைத்தும் 'பாமக' விதிகளுக்கு எதிரானது." என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டிப் பேசியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

SIR: "என் பெயரில்லை; நான் எப்படிப் போட்டியிடுவது" -தேஜஸ்வி கேள்விக்கு தேர்தல் ஆணையத்தின் பதில் என்ன?

பீகார் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் சூழலில், எதிர்க்கட்சிகளின் பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில், ஒரே மாதத்தில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்தை (SIR) தே... மேலும் பார்க்க

பாலியல் குற்றவாளி பிரஜ்வல் ரேவண்ணாவுக்குச் சாகும் வரை ஆயுள் தண்டனை; சிறப்பு நீதிமன்றம் அதிரடி

பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்குள்ளான முன்னாள் எம்.பி பிரஜ்வல் ரேவண்ணா நேற்று நீதிமன்றத்தால் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில், இன்று அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது... மேலும் பார்க்க

"ஓ.பி.எஸ் வந்துகொண்டிருக்கிறார்..!" - கூட்டணி குறித்து திமுக அமைச்சர் பேச்சு!

திருச்சியில் 'நலன் காக்கும் ஸ்டாலின்' முகாமைப் பார்வையிட்ட நகராட்சி நிர்வாகம் (ம) குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திமுக கூட்டணிக்கு வருவதாகப் பேசியிரு... மேலும் பார்க்க

"அது நடக்கவில்லையென்றால் மோடி இன்று பிரதமரே அல்ல" - ஆதாரங்களை வெளியிடுவதாக ராகுல் உறுதி

மக்களவைத் தேர்தல் கடந்த ஆண்டு முடிந்த பிறகு நடத்தப்பட்ட மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடந்திருப்பதாகத் தேர்தல் ஆணையத்தின் மீது ராகுல் காந்தி தொடர்ச்சியாகக் குற்றச்சாட்... மேலும் பார்க்க

ஆண்டிபட்டி திமுக MLA-வைத் திட்டிய MP தங்கதமிழ்செல்வன்; மேடையில் கடும் வாக்குவாதம்; என்ன நடந்தது?

ஆண்டிபட்டியில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் துவக்க விழாவில் ஆண்டிபட்டி திமுக எம்எல்ஏ மகாராஜன் மற்றும் தேனி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்செல்வன் கலந்து கொண்டனர்.முகாமின் வரவேற்பு பேனரில் ஆண... மேலும் பார்க்க

'ஆணவக் கொலைகளுக்கு காரணம் கட்சிகள் அல்ல சமுதாய அமைப்பு'- கமல்ஹாசன் காட்டம்

நாடாளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்று கூட்டத்தொடரில் கலந்து கொண்ட பின் கமல்ஹாசன் சென்னை திரும்பி இருக்கிறார். விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், " நாடாளுமன்றத்தை வெளியில் இருந்து பார்த்திருக்... மேலும் பார்க்க