செய்திகள் :

Death cafe: டீ, காபி உடன் மரணம் பற்றிய உரையாடல் - இந்த டெத் கஃபே எதற்காக உள்ளது தெரியுமா?

post image

பொதுவாக மரணத்தைப் பற்றி யாரும் அமர்ந்து பேச மாட்டார்கள். மரணம் என்ற வார்த்தையே ஒரு வித உணர்ச்சி தொடர்பான விஷயமாக தோன்றும். ஆனால் மரணத்தை பற்றி பேசுவதற்கென்று ஒரு இடம் இருக்கிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? டெத் கஃபே என்னும் புதிய முயற்சி மரணம் மற்றும் வாழ்க்கை பற்றிய உரையாடல்களை வரவேற்கும் இடமாக உள்ளது.

இது சாதாரண கஃபேக்களை போன்றில்லாமல், டீ, காபி, கேக் போன்ற உணவு பொருட்களுடன் மரணம் பற்றிய தங்களது உணர்வுகளையும், அனுபவங்களையும், எண்ணங்களையும் இங்கு பகிர்ந்து கொள்கின்றனர்.

death cafe

டெத் கஃபே எதற்காக?

இந்த டெத் கஃபேவின் நோக்கம் மரணம், வாழ்க்கை மற்றும் அதை சுற்றியுள்ள அனைத்து விஷயங்களை பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று உணர்வுகள், எண்ணங்கள், தங்களின் தனிப்பட்ட அனுபவங்கள் என மாறி மாறி பகிர்ந்து கொள்வதற்கு இந்த இடம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

டெத் கஃபே எப்போது தொடங்கியது

2011 ஆம் ஆண்டு ஜான் அண்டர்வுட் மற்றும் அவரது தாயார் சூசி ஆகியோரால் தொடங்கியிருக்கிறது. பௌத்த தத்துவங்கள், ஸ்வீஸ் சமூகவியலாளர்கள் போதனைகளால் ஈர்க்கப்பட்ட ஒரு கூட்டம் வீட்டின் அடித்தளத்தில் நடத்தப்பட்டிருக்கிறது. அதன் பின்னர் உலகம் முழுவதும் பரவி இன்று 80க்கும் மேற்பட்ட நாடுகளில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கஃபேக்கள் உள்ளன.

இந்தியாவில் இன்றும் மரணத்தை பற்றி பேசுவது ஒரு உணர்ச்சிகரமான விஷயமாக இருந்தாலும் டெல்லி, மும்பை, பெங்களூரு, பூனே போன்ற நகரங்களில் மெதுவாக டெத் கஃபேக்கள் வரத் தொடங்கியுள்ளன. பெங்களூருவில் மனநல அமைப்புகளால் இந்த டெத் கஃபேக்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

டெத் கஃபேக்கள் தேவையா?

மரணத்தை பற்றி பேசுவது அசெளகரிமாக இருந்தாலும் மரணம் ஒரு இயல்பான, இயற்கையான ஒன்று, அதை சுற்றியுள்ள பயத்தை குறைக்கும் நோக்கத்தை இந்த புதிய முயற்சி கொண்டுள்ளது.

இந்த உரையாடல்கள் மனநலத்தை மேம்படுத்துவதோடு, துக்கம், தனிமை, மனசோர்வு ஆகியவற்றை வெளிப்படுத்த ஒரு ஆதரவான சூழலை வழங்குகின்றனவாம்.

இந்த டெத் கஃபேக்கள் மூடநம்பிக்கைகளை ஊக்குவிப்பதற்காகவோ, அல்லது தற்கொலையை ஆதரிப்பதற்காகவோ இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். பலரும் இதனை தவறாக புரிந்து கொள்கின்றனர். இவை முற்றிலும் தன்னார்வமான, தத்துவம் அடிப்படையிலான வாய்ப்புகளை மட்டுமே இது வழங்குவதாக கூறப்பட்டுள்ளது.

மாலேகாவ் குண்டு வெடிப்பு வழக்கு: "யோகி ஆதித்யநாத் பெயரைச் சொல்ல நிர்ப்பந்தம்" - சாட்சி வாக்குமூலம்

மகாராஷ்டிரா மாநிலம் மாலேகாவில் கடந்த 2008ம் ஆண்டு மசூதி அருகே வெடிகுண்டு வெடித்து 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 100 பேர் காயம் அடைந்தனர். இக்குண்டு வெடிப்பை இந்து அமைப்புகள் நடத்தியதாக மகாராஷ்டிரா தீவிர... மேலும் பார்க்க

Male birth control pill: ஆண்களுக்கான முதல் கருத்தடை மாத்திரை! - பக்க விளைவுகள் உண்டா?

உலகளவில் கருத்தடைக்கான பொறுப்பு 70 முதல் 75 சதவிகிதம் வரை பெண்கள் மீதே திணிக்கப்படுவதாக, ஐக்கிய நாடுகள் மக்கள் தொகை நிதியமும், உலக சுகாதார அமைப்பும் இதற்கான சிறப்பு ஆய்வின் அடிப்படையில் தெரிவிக்கின்றன... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: சட்டமன்றத்தில் ரம்மி விளையாடிய அமைச்சர்; எழுந்த கண்டனங்கள்... பறிக்கப்பட்ட இலாகா!

மகாராஷ்டிரா சட்டமன்றத்தின் மழை காலக்கூட்டத்தொடர் கடந்த வாரம் மும்பையில் நடந்தது. இக்கூட்டத்தொடரின் போது தேசியவாத காங்கிரஸ்(அஜித்பவார்) கட்சியின் வேளாண்மை துறை அமைச்சர் மாணிக்ராவ் கோக்டே தனது மொபைல் போ... மேலும் பார்க்க

Top News: BJP கூட்டணியிலிருந்து OPS விலகல் டு ம.பி-யில் 23000 பெண்கள் மாயம் வரை |ஜூலை 31 ரவுண்ட்அப்

ஜூலை 31 - டாப் செய்திகள்!* திருநெல்வேலி கவின்குமார் ஆணவக்கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் அவரின் காதலி, தாங்கள் இருவரும் உண்மையாகக் காதலித்ததாகவும், தங்களின் ரிலேஷன்ஷிப் பற்றி யாரும் தவறாகப் பேச வேண்டாம்... மேலும் பார்க்க

சவுதி அரேபியா: ராட்சத ராட்டினம் இரண்டாக உடைந்து விபத்து: 26 பேர் படுகாயம் - பதறவைக்கும் வீடியோ!

சவுதி அரேபியாவின் தைஃப் நகரில் உள்ள கிரீன் மவுண்டன் பூங்காவில் இன்று கோர விபத்து நடந்துள்ளது. '360 டிகிரி' எனப்படும் ராட்சத ராட்டினத்தின் மையத் தூண் இயக்கத்தின்போது திடீரென உடைந்து விழுந்ததில் 26 பேர... மேலும் பார்க்க

Kerala: கல்லறைகளில் இடம்பெறும் QR கோடு - என்ன காரணம் தெரியுமா?

கேரளாவில் உள்ள கல்லறை ஒன்றில், உலோகத்தால் ஆன QR கோடு உருவாக்கப்பட்டு, பதிக்கப்பட்டுள்ளது. அந்த கோட்டை யாராவது தங்களது செல்போனில் ஸ்கேன் செய்தால், அந்தக் கல்லறையில் இருக்கும் நபரின் வாழ்க்கை, நினைவுகள்... மேலும் பார்க்க