இளைஞன் - வளர்ந்த மனிதன்... பத்தாண்டுக்குப் பிறகு பிரீமியர் லீக்கிலிருந்து விலகும...
Male birth control pill: ஆண்களுக்கான முதல் கருத்தடை மாத்திரை! - பக்க விளைவுகள் உண்டா?
உலகளவில் கருத்தடைக்கான பொறுப்பு 70 முதல் 75 சதவிகிதம் வரை பெண்கள் மீதே திணிக்கப்படுவதாக, ஐக்கிய நாடுகள் மக்கள் தொகை நிதியமும், உலக சுகாதார அமைப்பும் இதற்கான சிறப்பு ஆய்வின் அடிப்படையில் தெரிவிக்கின்றன. தற்போது, இதற்கொரு தீர்வாக ஆண்களுக்கான முதல் கருத்தடை மாத்திரையான YCT - 529 பக்க விளைவுகள் இல்லாமல் செயல்படுவதாக, அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த கருத்தடை மருந்தை, நியூயார்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகமும், YourChoice Therapeutics என்கிற உயிரி மருந்து நிறுவனமும் இணைந்து உருவாக்கி இருக்கின்றன. எலிகள், ஆண் குரங்கு ஆகியவற்றின் மீது பரிசோதனை செய்து பார்த்தவர்கள், பின்னர் ஆரோக்கியமான சில ஆண் தன்னார்வலர்களுக்கு இந்த மாத்திரையை வழங்கி பரிசோதித்துள்ளனர். முடிவு பாசிட்டிவாக இருந்துள்ளது.
கருத்தடைக்காக பெண்கள் பயன்படுத்துகிற மாத்திரைகள் ஹார்மோன் அடங்கியவை. ஆண்களுக்கான இந்தக் கருத்தடை மாத்திரையோ ஹார்மோன் அல்லாதவை. பெண்களுக்கான கருத்தடை மாத்திரைகள் பக்கவிளைவாக தலைவலி, மார்பக வலி, எடை அதிகரிப்பு, மனநிலை மாற்றம் போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தலாம். ஆனால், YCT - 529 ஆண் ஹார்மோனான டெஸ்ட்டோஸ்டீரானில் (Testosterone) பாதிப்புகள் ஏற்படவில்லையாம். தவிர, மனநிலையில் மாற்றம், ரத்த அழுத்தம், உடல் எடை சார்ந்த பிரச்னைகளும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட ஆண்களுக்கு ஏற்படவில்லையாம்.

ஆண்களுக்கான இந்தக் கருத்தடை மாத்திரை, விந்தணு உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் RAR-α என்கிற புரதத்தை தடை செய்து உயிரணுக்களின் உற்பத்தியை தற்காலிகமாக தடை செய்கிறது. இந்த மாத்திரையின் தாக்கம் வெறும் 4 முதல் 6 வாரங்கள் வரை மட்டுமே நீடிக்கும். இந்த கருத்தடை மாத்திரை உலகம் முழுக்க பயன்பாட்டுக்கு வந்தால், கருத்தடைப் பொறுப்பில் ஆணும் பகிர்ந்துகொள்ளலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்..!
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR