செய்திகள் :

Sitaare Zameen Par: "சினிமாவை எல்லோருக்கும் கொண்டு சேக்கணும்" - கிராமத்தினருடன் படம் பார்த்த ஆமீர்!

post image

2018 ஆம் ஆண்டு ஸ்பானிஷ் மொழியில் வெளியான சாம்பியன்ஸ் என்ற படம், இந்தியில் 'சித்தாரே சமீன் பர் (Sitaare Zameen Par)' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு திரையரங்குகளில் வெளியானது.

மூளை வளர்ச்சி சவால் உடைய கூடைப்பந்து வீரர்களின் பயிற்சியாளராக ஆமீர் கான் நடித்திருக்கிறார். கடந்த ஜூன் 20-ம் தேதி இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிப் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது.

தற்போது இப்படத்தை ஆமீர் கான், யூடியூப்பில் வெளியிட்டிருக்கிறார்.

இப்படத்தை எல்லோரிடமும் கொண்டு சேர்க்க வேண்டும் என குஜராத்தில் இருக்கும் கிராமம் ஒன்றில் 'சித்தாரே சமீன் பர்' திரையிட்டிருக்கிறார் ஆமீர் கான். அப்போது, கிராம மக்களுடன் சேர்ந்து படம் பார்த்த ஆமீர் கான், "சினிமாவை எல்லோரிடமும் கொண்டு சேர்க்கும் எனது கனவை நிறைவேற்ற முயற்சி செய்து வருகிறேன். இன்று இந்தக் கிராமத்தில் வெறும் ரூ.100 செலுத்தி ஒட்டு மொத்த கிராமமும் படம் பார்த்தது. நல்ல கருத்துள்ள திரைப்படம் எல்லோரிடத்திலும் கொண்டு சேர்க்க வேண்டும். எல்லோரும் பார்க்க வேண்டிய திரைப்படம் இது" என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Jawan: "இது உங்களுக்கான என் முதல் காதல் கடிதம்; இனி நிறைய வரும்" - ஷாருக் கான் குறித்து அட்லீ

71-வது தேசிய விருதுகள் நேற்று (ஆகஸ்ட் 1) அறிவிக்கப்பட்டது. இதில், சிறந்த நடிகருக்கான விருதை, அட்லீ இயக்கிய 'ஜவான்' திரைப்படத்திற்காக ஷாருக் கான் வென்றிருக்கிறார்.இந்நிலையில் அட்லீ, ஷாருக் கானையும், பட... மேலும் பார்க்க

Aamir Khan: ``திரையரங்க வியாபாரத்தைப் பாதுகாக்கவே பொய் சொன்னேன்!'' - மன்னிப்புக் கேட்ட ஆமீர் கான்

புதிய முயற்சியாக தன்னுடைய 'சித்தாரே ஜமீன் பர்' திரைப்படத்தை திரையரங்க வெளியீட்டிற்குப் பிறகு நேரடியாக யூடியூபிற்கு கொண்டு வருகிறார் ஆமீர் கான். பார்வையாளர்கள் சந்தாவைச் செலுத்தி படத்தைப் பார்க்கும் வக... மேலும் பார்க்க

Aamir Khan: ``யூடியூப்பில் 'Sitaare Zameen Par' படத்தை வெளியிட காரணம் இதுதான்..'' - ஆமிர் கான்

2018 ஆம் ஆண்டு ஸ்பானிஷ் மொழியில் வெளியான சாம்பியன்ஸ் என்ற படம், இந்தியில் 'சித்தாரே சமீன் பர் (Sitaare Zameen Par)' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.மனிதர்களின் குறைபாடுகளை புரிந்துகொள்ளும், மூளை... மேலும் பார்க்க

Sitaare Zameen Par: "சவாலில் போராடி வருகிறேன்!" - யூட்யூபில் படத்தை வெளியிட ஆமீர் கான் முடிவு!

இயக்குநர் ஆர். எஸ். பிரசன்னா இயக்கத்தில் ஆமீர் கான் நடித்திருந்த 'சித்தாரே ஜமீன் பர்' திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. ஆமீர் கானுடன் ஜெனிலியாவும் இப்படத்தில் முக்கியமானதொரு கதாபாத்திரத்த... மேலும் பார்க்க

Ambikapathy Rerelease: "அது எப்படி க்ளைமேக்ஸை மாற்றலாம்?" - AI Climax குறித்து ஆனந்த் எல் ராய்

இயக்குநர் ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் தனுஷ் நடித்திருந்த 'அம்பிகாபதி' திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 1-ம் தேதி தமிழகமெங்கும் ரீ-ரிலீஸாகிறது.எப்போதுமே ரீ-ரிலீஸில் படத்தைத் தற்போதைய தொழில்நுட்பங்களுக்கேற்ப ம... மேலும் பார்க்க

SAIYAARA: "இந்தத் திரைப்படம் உண்மையிலேயே இந்தி சினிமாவின் STARதான்" - பாராட்டிய ஜோதிகா

பாலிவுட் இயக்குநர் மோஹித் சூரி இயக்கத்தில், அறிமுக நடிகர்கள் அஹான் பாண்டே, அனீத் பட்டா ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் 'SAIYAARA'. இந்தியாவில் இந்தப் படத்தின் முதல் நாள் கலெக்ஷன் மட்டும் 20 ... மேலும் பார்க்க